சமயங்கள் வளர்த்த தமிழ்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மயிலை.சீனி. வேங்கடசாமி
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :144
பதிப்பு :5
Published on :2018
Out of StockAdd to Alert List
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வளாகத்தில் நேற்று மாலை, "சமயம் வளர்த்த தமிழ்' கருத்தரங்கு நடந்தது. சாந்தலிங்க ராமசாமி அடிகள் தலைமை வகித்து பேசியதாவது: பழமையான, உயர்வான மொழி தமிழ் மொழி. கொங்கு நாடு மிகச் சிறந்த பண்பாடு கொண்ட நாடு. தலைசிறந்த புலவர்கள், அறிஞர்கள், சமய வழியில் தமிழை வளர்த்தவர்கள் வாழ்ந்த நாடு. கொங்கு நாடு மலை மற்றும் மலை சார்ந்த பகுதியான குறிஞ்சியைச் சேர்ந்தது. பழங்காலம் முதல் இப்பகுதி மக்கள் தெய்வபக்தியோடு வாழ்ந்தனர் என்பதை சமய நூல்கள் எடுத்துரைக்கின்றன.ஆறாம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டு வரை இலக்கிய காலம். இனி வரும் காலங்களில் கோவில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் மொழியில் நடத்த அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எல்லாம் தமிழ் என்பதை வலியுறுத்த, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு உதவும்.