"தனி மனிதர்களை நெறிப்படுத்தவும், சிந்திக்க வைக்கவும் நாவல்களும், சிறுகதைகளும் பெரிதும் உதவுகின்றன என்பதை அனைவரும் ஏற்பர். இந்த நாவலும், டாக்டர் சங்கரி என்ற பாத்திரத்தின் மூலம்,சமுதாயத்தில் நிகழும் பயங்கரமான பேராசைப் பேய்களுடன் தனித்துப் போராடி, வெற்றி காணும் விதத்தைக் கூறுகிறது.
தெய்வத்திரு கி.வா.ஜகன்நாதனால் பாராட்டப்பட்ட இந்நாவல், 16 பதிப்புகளைக் கண்டுள்ளதும், பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதும், பல்கலைக்கழகத்தில், கல்லூரிகள், பாட நூலாக விளங்கியதும் நூலின் சிறப்புக்கு அடையாளங்கள் ஆகும். அருமையான நாவல்."