book

யுவான்சுவாங் இந்தியப் பயணம் (பகுதி 1)

₹240+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: பொன் சின்னத்தம்பி முருகேசன்
பதிப்பகம் :புதுமைப்பித்தன் பதிப்பகம்
Publisher :Pudumaipithan Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :256
பதிப்பு :2
Published on :2009
Out of Stock
Add to Alert List

புனிதப் பயணியருள் பௌத்த சமயத்தின்பால் தீராத பற்றுக்கொண்ட கன்ஃபூசியனிச சிந்தனை மரபு வழித்தோன்றலான யுவான்சுவாங்கின் இந்தியப் பயணம் பற்றிய குறிப்புகள் பேரார்வத்தைத் தூண்டக்கூடியவை. யுவான்சுவாங் சுமார் பதினாறு ஆண்டுகாலம் பயணம் செய்து தான் நேரில் கண்டவற்றையும் கேள்விப்பட்டவற்றையும் அக்கால சீனப்பேரரசர் தாங் வேண்டுகோளுக்கேற்ப சீனமொழியில் இயற்றிய பயண நூலினை தாமஸ் வாட்டெர்ஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். யுவான்சுவாங் பயணக் குறிப்புகளுக்கு இணையாக ஆங்கில மொழிபெயர்ப்பாளரின் ஆய்வுரைகள் இன்றியமையாதவை. இரண்டையும் உள்ளடக்கமாகப் பெற்ற நூல் தமிழிலும் வரவேண்டும் என்று எழுந்த பேரவாவின் துவக்கமாக ஆங்கில நூலின் ஒருபகுதி தமிழில் முதல் தொகுதியாக உங்கள் கைகளில்.