ஐங்குறுநூறு குறிஞ்சியும் பாலையும்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2010
Add to Cartகுறிஞ்சித் திணைக்கு உரிய கருப்பொருளில் குறவர் முக்கியப் பங்கு வகிப்பர். குன்றத்தில் வாழும் குறவன் என்ற பொருளால் குன்றக் குறவன் என்ற சிறுதொடர் பயின்று வரும் பத்துப் பாடல்களின் தொகுதி குன்றக் குறவன் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.குன்றக் குறவன் புல் வேய் குரம்பை
மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடன்புரையோன் வாழி, தோழி! விரை பெயல்
அரும் பனி அளைஇய கூதிர்ப்பெருந் தண் வாடையின் முந்து வந்தனனே.
மணமுடிக்க பிரிந்துச் சென்ற தலைவன் குறிப்பிட்ட காமணமுடிக்க பிரிந்துச் சென்ற தலைவன் குறிப்பிட்ட காலம் தோன்றும் முன்னே திரும்பியமைக் கண்ட தோழி மகிழ்ந்து தலைவிக்கு சொல்லியது..,குன்றக் குறவன் வாழும் புல்லால் வேயப்பட்ட குடிசையை மன்றத்தில் நகரும் மூடுபனி மறைக்கும்.இப்படி மூடுபனி மறைக்கும் நாட்டின் தலைவன் உன் காதலன். அவன் மிகவும் உயர்ந்த பண்புள்ளவன். மணத்துடன் கூடிய பனி மூட்டம் கலந்து குளிர் மிகும் கூதிர் காலம் வருவதற்கு முன்பே திருமணம் செய்துகொள்ள உன்னைத் தேடி வந்துவிட்டான்.குறவனது புல்வேய்குரம்பை மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடனென்றது, பிரிவின்கண் தங்கட்கு வந்த துன்பத்தை இவன் மறைத்தது என்பதாம். வறுமை கூர்ந்த புல்வேய் குரம்பையை மழை புறமறைத்தாற் போல வாடை செய்யும் நோய் மறையுமாறு, துன்பம் மறையுமாறு தலைவன் வந்தான் என்றது உள்ளுறையுவமாக கூறப்பட்டுள்ளது.