book

மார்க்சிய ஞானி ஆர்.கே. கண்ணன்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. பரமசிவம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :110
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123420219
Add to Cart

கோவை ஞானியின் கோவை ஞானி - மார்ச்சியமும் தமிழ்த் தேசியமும்இயற்பெயர் கி. பழனிச்சாமி. 1935ஆம் ஆண்டு கோவை மாவட்டம், பல்லடம் வட்டம் சோமனூரில் பிறந்தவர். கோவையிலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் தமிழ் இலக்கியம் கற்றவர். பின்பு, கோவையில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர். இடையில் ஏற்பட்ட பார்வை இழப்பின் காரணமாக ஆசிரியப்பணியை விட்டவர். பார்வை இழப்புக்குப் பிறகு இன்றுவரை புதிய புதிய நூல்களைக் கற்று, அவை பற்றிய திறனாய்வுகளையும், விவாதங்களையும் எழுதி வருகிறார் ஞானி. இதழியலில் தீராத ஆர்வம் கொண்டு, எப்போதும் ஏதாவது ஒரு இதழை நடத்தி வருகிறார். இப்போது `தமிழ் நேயம்’ இதழை நடத்தி வருகிறார்.
மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம், தமிழ் தேசியம் என ஞானியின் ஈடுபாடும் தனித்துவமானது. 1965 முதல் ஞானிக்கு மார்க்சிய ஈடுபாடு. எஸ்.என். நாகராஜனைத் தனது மார்க்சிய ஆசானாகக் கூறுகிறார் ஞானி. பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர், `நிகழ்’ இதழின் மூலமும் தமிழ் அறிவுச் சூழலில் பாதிப்பை உருவாக்கியவர். வறட்டுத்தனமான கட்சி மார்க்சியராக இல்லாது, ஆழ்ந்த படிப்புணர்வின் மூலம் ஏற்பட்ட நுட்பம், அவரது வார்த்தைகளில் தெறிக்கிறது.