வினவக் கண் விழித்தேன்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நலங்கிள்ளி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788177356908
Add to Cartமனிதரில் ஆயிரம் ஜாதி-என்ற
வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை;
கனிதரும் மாமரம் ஒன்று-அதில்
காய்களும் பிஞ்சுக் கனிகளும் உண்டு.
பூவில் உதிர்வதும் உண்டு-பிஞ்சைப்
பூச்சி அரித்துக் கெடுவதும் உண்டு
நாவிற் கினியதைத் தின்பார்-அதில்
நாற்பதி னாயிரம் சாதிகள் சொல்வார்.
ஒன்றுண்டு மானிட சாதி-பயின்று
உண்மைகள் கண்டவர் இன்பங்கள் சேர்வார்;
இன்று படுத்தது நாளை-உயர்ந்
தேற்றம் அடையும் உயர்ந்த திழியும்.
நந்தனைப் போல்ஒரு பார்ப்பான்-இந்த
நாட்டினில் இல்லை;குணம் நல்லதாயின்,
எந்தக் குலத்தின ரேனும்-உணர்
வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம்.