book

ஒரு நட்சத்திரம் நிலவைத் தேடுகிறது

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முகவியன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :430
பதிப்பு :1
Published on :2011
ISBN :9798177359991
Add to Cart

ஒவ்வொரு பெண்ணும் தன் எதிர்காலக் கணவரைத் தானே ஆராய்ந்து தேடிக்கொள்ளும் வகையில் பெண்ணின் பெற்றோர் அவளுக்குப் பரிபூரணமான சுதந்தரத்தை வழங்கி முழுமையாக ஒதுங்கிவிடவேண்டும். அதே போல் பெண்ணும், தனது பெற்றோரின் பாரம்பரியத்திற்கு யாதொரு இழுக்கும் நேரிடாத வண்ணம் ஆடவரோடு கவனமாகப் பழகி, வாழக்கைக்கு ஏற்ற துணையைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்து கொள்ளவேண்டும்..  இன்றைய சிதறுண்டு போயிருக்கும் சமூகக் கட்டுப்பாடுகளிலும் ஒழுக்க நெறிகளிலும் இது சாத்தியமா என்பது பிரச்னையே, சாத்தியமானால்  மனதுக்குகந்த ஓர் இளைஞனும் , யுவதியும் அடுத்தடுத்து சந்திக்கும் வாய்ப்புகளைத் தொடர்ந்து பெற்றால்,, அவர்களது மனக்கட்டுப்பாடு வெல்லுமா  அல்லது அவர்களது இளமையும் , உணர்வு வேட்கையும் வெல்லுமா . திருமணத்திற்கு முன்னர் தமது தூய்மையைக் களங்கப்படுத்திக்கொள்ளக்கூடாது என்று தமக்குத்தாமே சங்கற்பம் செய்து கொண்டு விழிப்புணர்ச்சியோடு பழகும் இரண்டு  காதல் ஜோடிகளின் உள்ளங்களில் தோன்றும் மனப்போராட்டமே இந்த நாவல்.