வீடு தேடி வரும் வில்லன்கள்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச. கோசல்ராம்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2012
Add to Cartகுற்றங்கள் மலிந்து விட்டன. குற்றவாளிகள் சிலரில் இருந்து பலர் ஆகி
விட்டார்கள். அகத்தின் அழகு இப்போதெல்லாம் முகத்தில் தெரிவதில்லை. சிரித்த
முகத்தோடு, தான் செய்த கொலையை விவரித்து, வாக்குமூலம் கொடுக்கும்
ஜென்டில்மேன் கள் நமக்கு மிகவும் பழகிய முகங்களாகி வருகின்றனர். சினிமாவை
மிஞ்சும் வில்லத்தனத்தோடு, படிக்கிற வயதில் பக்காவாக கொலை செய்கிறான்
மாணவன். யாரையோ அல்ல. கூடவே இருந்து சமைத்துப் போட்ட அத்தையை. பத்தாம்
வகுப்பிலேயே பள்ளி கழிவறையில் தனக்குத் தானே பிரசவம் பார்த்து குழந்தையை
வீசி எறிகிறாள் மாணவி. வீட்டில் யாருக்கும் தெரியாதாம். உறவும் சரி, ஊரும்
சரி.. எதையுமே நம்ப முடியவில்லை.. வீட்டோடு பிள்ளையாக வளரும் கார் டிரைவர்,
கடத்தல் வேலை பார்க்கிறான்.. பால்காரன், பேப்பர்காரனை பார்த்தால் பயமாக
இருக்கிறது. கொலைக்கும் கொள்ளைக்கும் துப்புக் கொடுக்கும் உளவு வேலையில்
இவர்கள் கிரிமினல்கள் ஆகி விட்டார்கள். பத்துப் பாத்திரம் தேய்ப்பவள் பல
கொள்ளைகளில் பக்கபலமாக இருக்கிறாள். அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடிய
வறுமை குற்றவாளிகள் இப்போது சில, பல லகரங்களுக்கு ஆசைப்பட்டு கொலை செய்ய
கற்றுக் கொண்டு விட்டார்கள். கூலிப்படை ரேஞ்சுக்கு அந்தஸ்து பெற்ற
கும்பலும் இதில் அடங்கும்.இந்த ஷாக் தொடரின் நோக்கம், யாருக்கும் தெரியாத
குற்றங்களை தேடுவதல்ல.. நம்மில் கலந்து நிற்கும் நயவஞ்சகர்களின்
வில்லத்தனங்களை தோலுரிப்பதுதான். வீடு தேடி வந்து, வீட்டுக்குள்ளேயே
இருந்து, நம்ப வைத்து நாசம் செய்யும் சில வில்லன்கள் பற்றி இந்த தொடர்
விவரிக்கும் இந்த நூல்