ஆழ்வார்கள் அருள்மொழி
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாமி. சிதம்பரனார்
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2012
Add to Cartசரஸ்வதியிலும், இன்னும பல ஏடுகளிலும் எழுதிவந்த பகுத்தறிவியக்கம் சார்ந்த முற்போக்குத் தமிழ் அறிஞர். இவர் பிற திராவிட இயக்கத்தி னர் செய்ததுபோல கம்பராமாயணம் போன்ற பழைய இலக்கியங்களைக் கண்மூடித் தனமாகச் சாடவில்லை. வடிவ அடிப்படையிலான இலக்கியப் பார்வையுடன் எழுதி னார். வள்ளுவர் காட்டிய வைதீகம், சிலப்பதிகாரத் தமிழகம், மணிமேகலை காட்டும் சமுதாய நிலை, என்றாற்போல சமூகப் பின்னணிக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதினார். ஆழ்வார்கள் அருள்மொழி, சங்கப்புலவர் சன்மார்க்கம், இலக்கியம் என்றால் என்ன, சித்தர்கள் கண்ட விஞ்ஞான தத்துவம் போன்ற இவரது நூல்கள் சிறப்பானவை. இவர் தம் இரசனைச் சிறப்புக்கு இவரது கம்பராமாயணப் பதிப்பு எடுத்துக்காட்டு. பிற நூல்களை சமூகப்பார்வைகள் என்று சொல்லலாம். மொழி என்பது ஒருநாட்டின் மக்கள் அறிவு வளர்ச்சி பெறுவதற்கும் நாகரிகமடை வதற்கும் முதன்மையான காரணமாக இருப்பது. தமிழ்மொழியை மட்டும் படித்த ஒருவர் குறுகியஅறிவுகொண்டு மதவேற்றுமை வகுப்பு வேற்றுமை பாராட்டுகின்றார். தொல்காப்பியத்தில் சாதி என்னும் சொல் மக்களைக் குறிக்கவில்லை. தண்ணீரில் வாழும் உயிரினங்களைத்தான் குறிக்கிறது. பிற்காலத்தில்தான் இச்சொல் மனிதப் பிரிவுகளைக் குறித்தது. தொல்காப்பியர் ஆண் பெண் சமத்துவத்தை விரும்ப வில்லை. ஆண்கள் பல பெண்களை மணந்துகொள்ளலாம், விலைமாதருடன் கூடி வாழலாம் என்பது சங்க இலக்கியத்திலும் உண்டு. ஆண்பெண் வேறுபாட்டைப் பழம் இலக்கியங்கள் போற்றியதையே இது எடுத்துக்காட்டுகிறது.