பலவித தரைகளும் பராமரிப்பு முறைகளும்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :மற்றவை
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2013
Add to Cartவாசக பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கங்கள்!
பல்வேறு உபதொழில்களைஉள்ளைடக்கிய ஒரு பெருந்துறைதான் கட்டுமானத்துறை. இதில் ஒவ்வொரு துறை பற்றியும் ஒவ்வொரு புத்தகத்தை வெளியிட்டால் அதுவே இருநூற்றைக்கூடத் தாண்டி விடும். ஆங்கில மொழியில் அப்படித்தான் வெகு நுட்பமாக ஒவ்வொரு துறை பற்றியும் தனித்தனி நூல்களை ஆராய்ந்து, எழுதி வெளியிடுகிறார்கள். தமிழிலும் அவ்வாறு நூல்கள் வெளியாவது பாராட்டுக்குரியதே.
அந்த வரிசையில் ‘பலவித தரைகளும் பராமரிப்பு முறைகளும்’ என்கிற இந்நூல் தரை அமைப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கும், தொழிலாளைர்களுக்கும், காண்ட்ராக்டர்களுக்கும் மட்டுமன்றி, சொந்த வீடு கட்டும் பொதுமக்களுக்கும் தரை தொடர்பான விரிவான தகவல்களையும், ஆலோசனைகளையும் அளிக்கும் எனச் சொல்லலாம்.பலவிதமான தரைகள், பலவித தரை கட்டுமானப் பொருட்கள், தரை அமைப்பதற்குத் தேவையான சாதனங்கள், இயந்திரங்கள், எவ்வகை பயன்பாட்டிற்கு எவ்வகையான தரைகள் தேவை? தரை அமைப்பதில் தற்போது கடைபிடிக்கப்படும் நவீன தொழிற்நுட்பங்கள் போன்ற பல செய்திகள் மட்டுமன்றி தரை பராமரிப்பு, பாதுகாப்பு, அலங்கரிப்பு ஆலோசனைகளும் இந்நூலில் தொகுத்து கூறப்பட்டுள்ளைது.வெகு அரிதான தலைப்பில் முக்கிய தகவல்களையும், ஆலோசனைகளையும் தொகுத்து அளித்திருக்கும் பிராம்ப்ட் ஆசிரியர் குழுவின் முயற்சி பாராட்டுதற்குரியது.