பூலோக வைகுண்டம் குருவாயூர் வரலாறு
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்ரீவத்ஸராஜன்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :2
Published on :2013
Add to Cartகாக்கும் கடவுள் பத்து அவதாரங்கள் எடுத்தாலும் அதில் அனைவருக்கும் பிடித்த
மற்றும் பல பின்னனி கதைகள் கொண்ட அவதாரம் கிருஷ்ணன் அவதாரம். பிறந்தது
முதல் கீதை உபதேசம் வரை அவரின் லீலைகள் பல. அப்படி குட்டி கிருஷ்ணராக சில
லீலைகளை செய்தவராக கேராளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் குருவாயூரப்பனாக
காட்சி தருகின்றார். கிருஷ்ணரின் தனிப்பெரும் சிறப்பு மிக்க குருவாயூர்
ஸ்ரீ கிருணன் கோயிலின் வரலாறும் அதன் முக்கியத்துவம் குறித்து இந்த பதிவில்
பார்ப்போம்.
பெருமாளுக்குப் பல புனித தலங்கள் இம்மண்ணில்
உண்டு. பெரும்பாலும் அந்த தலங்கள் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இருக்கும்.
ஆனால் திவ்ய தேசங்களின் பட்டியலில் இல்லாத கோயிலாக இருந்த போதிலும்
அனைவரிடத்திலும் பிரபலமான கோயிலாக குருவாயூர் கோயில் இருக்கிறது. நம்ம ஊர்
மக்கள் குழந்தைகளுக்கு சோறு ஊட்ட பெரும்பாலும் இந்த கோயிலுக்குத் தான்
செல்கின்றனர். அப்படி நமக்கு மிகவும் பரிச்சயமான கோயிலின் வரலாறு என்னவாக
இருக்கும். வாருங்கள் தெரிந்துக் கொள்ளலாம்!