book

கானலில் நீர் தேடிய மான்கள்

Kaanalil Neer Thediya Maangal

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ.எம். சாலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :70
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788123423883
Add to Cart

ஜலத்திலே ப்ரதிபிம்பம் தெரிகிறமாதிரி மண்ணிலேயே தெரிகிறது. தூரத்திலிருந்து பார்க்கிறபோது வெறும் மணற்பாங்கான பூமியே ஒரு நதி ஓடுகிற மாதிரி தெரியும்.
அதை நோக்கிப் போகப் போக, அதுவும் தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கும். இப்படிப்பட்ட கானல்நீரைப் பார்த்து மான்கள் வாஸ்தவமான ஜலம் என்று நினைத்து அதைத் தேடித் தேடி ஓடி கடைசியில் ஓடமுடியாமல் களைத்து, வெயிலின் உஷ்ணம் தாங்காமல், ரொம்பவும் பரிதாபமாக ஜீவனை இழக்கும், ஸம்ஸ்க்ருதத்தில் "ம்ருக்' என்றால் "தேடுவது' என்று அர்த்தம். ஓயாமல் எதையாவது தேடி ஓடிக்கொண்டே இருப்பதுதான் "ம்ருகம்'. கானல் நீரைத் தேடி ஓடி மடிவது மான் என்ற ம்ருகத்தின் பரிதாபமான கார்யமாக இருக்கிறது!
லோகமெல்லாம் மாயை என்று அத்வைத சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது.
"அதெப்படி மாயை? லோகம்தான் கண்ணுக்குத் தெரிகிறதே?' என்று கேட்டால், "கானல் நீர் கூடத்தான் கண்ணுக்குத் தெரிகிறது. அதனால் அது நிஜமாகிவிடுமா? அப்படித்தான் இந்த லோகமும் ஒரு கானல் நீர்' என்ற அத்வைத க்ரந்தங்களில் சொல்லியிருக்கிறது.