book

இதற்கா இத்தனை ஓட்டம்

Idharka Iththanai Ottam

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேங்கடம்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :200
பதிப்பு :2
Published on :2012
ISBN :9788184463064
Add to Cart

தமிழ் மக்களுக்குக் கிடைத்த ஒரு சிறந்த பரிசு, நனி சிறந்த தமிழ் நாளேடாம் தினத்தந்தியின் ஆசிரியர் திருமிகு. அமுதன் அவர்களால் படைக்கப்பெற்ற “ஆயிரம் ஆண்டு அதிசயம்“ என்னும் இந்நூல் தமிழ் மக்களுக்குக் கிடைத்த ஒரு சிறந்த பரிசு.
தமிழ்நாட்டு வரலாற்றையும், பண்பாட்டுக் கூறுகளையும் தம்முள் பொதித்து வைத்திருப்பவை திருக்கோவில்களே.
அத்தகு கோவில்கள் பற்றிய அருந்தகவல்களை மெத்தப் படித்த அறிஞர்கள் மட்டுமன்றி ஓர் எளிய பாமரனும் அறியும் வகையில் எடுத்துச் சென்று உரைப்பது ஒரு சாதுர்யமான கலையாகும்.
அதனை இந்நூலாசிரியர் வியத்தகும் வகையில் சாதித்துக் காட்டியிருக்கிறார்.
உலக மரபுச் சின்னமாக விளங்கும் இராஜராஜேச்சரம் என்னும் ஆயிரம் ஆண்டு பழமையுடைய தஞ்சைப் பெரிய கோவிலின் மாண்புகளைச் சுவையான முப்பத்தெட்டுத் தலைப்புக்களில் மணம் கமழும் சொல் மாலையாகத் தொகுத்து தந்துள்ளார்.
சோழர் தம் மரபுப் பெருமை, கல்லணை கட்டிய அறிவுத்திறம், குடவோலைத் தேர்வின் மூலம் நடத்திக் காட்டிய மக்களாட்சியின் மாண்பு, ஆதித்த கரிகாலனின் முடிவு, உடையார் குடி கல்வெட்டு குறிப்பிடும் தகவல், இராஜராஜன் ஆட்சிப் பீடம் ஏறிய வரலாறு, அவன் பட்டப் பெயர்கள், போர்களில் வெற்றி கண்ட அவன் படையினர் பற்றிய செய்திகள், மெய்க்கீர்த்தியோடு அவன் பிறந்த சதய நாட் சிறப்பு, பெரிய கோவிலின் கட்டுமான அமைப்புக்கு முன்னோடியாய்த் திகழ்ந்த திருக்கோவில்கள், சாந்தாரநாழி, சுருள்சாய்வுத்தள அமைப்பு முறை, கோவில் எடுத்தவன் யார் என்பதறிய இயலாத பத்தொன்பதாம் நூற்றாண்டின் அவலம், இராஜராஜன்தான் எடுத்தான் என்பதற்குரிய சான்று, அஸ்திவார தொழில் நுட்பம், அளவு முறைகள், துவாரபாலகர் சிலையை உண்மையான யானையோடு ஒப்பிட்டுக் காட்டும் பாங்கு, அணுக்கன் வாயில் பற்றிய அருஞ்செய்திகள், ஓவியங்கள் பற்றிய தரவுகள், பூகம்பங்கள் பற்றிய பட்டியல், உமாபதி சிவனார் கண்ட திருமுறை கண்ட புராணத்தின் திரட்சி, இவ்வாலயம் பற்றிய பாமரரிடையே நிலவும் கதைகளும், கற்பனைகளும் பற்றிய செய்திகள் என அனைத்துக் கோணங்களிலும் இக்கோவிலை அணு அணுவாக நம் கண் முன் நிறுத்தும் நூலாசிரியர் இப்படைப்பின் மூலம் தமிழ் மக்களுக்கு அருந்தொண்டாற்றியுள்ளார்.
நம் மரபுப் பெருமைகளையும், கட்டிடக் கலைத் துறையிலும், பிற கலைத்துறைகளிலும் நம் முன்னோர்கள் உலகளவில் என்ன சாதித்தார்கள் என்பதையும் நூல் படிப்பவர்கள் ஒவ்வொருவரும் உணரும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
தமிழர் தம் இல்லந்தோறும் இடம் பெற வேண்டிய இனிய நூல் இதுவென்பதில் அணுவளவும் ஐயமில்லை.