book

பால்ய சிநேகிதன்

Paalya Snehithan

₹37+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. காமராசு
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :142
பதிப்பு :1
Published on :2001
ISBN :8186048011
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள்
Add to Cart

இதழியலு துறையில் பேராசான் ஜீவா தொடங்கிய தாமரை இலக்கிய இதழுக்ககுத் தனி இடம் உண்டு.
குறிப்பாக சிறுகதை இலக்கியத்தில் மணிக்கொடி காலத்திற்குப் பிறகு தாமரை இதழில் எழுதியபலரும் இன்று இலக்கிய உலகில்  சுடர் விடுவதைக் காணலாம்.வாழ்க்கை யதார்த்தம் கலை யதார்த்தமாக இத்கதைகளில் அழகாக கையாளப்பட்டுள்ளன. உழைப்பு, வாழ்வின் மீதான நம்பிக்கை, எல்லையில்லா அன்பு மனித கம்பீரங்கள் உயர்த்திப்பிடிக்கப்பட்டுகின்றன. தற்குறித்தனம். ஏமாற்று, ஆதிக்கவெறி முதலிய இழிவுகள் அருவருப்புகளாகச் சுட்டப்பெற்கின்றன. இக்கதைகளை எழுதப்பட்டக்காலத்தில் வைத்து வாசிக்கும் போது இப்படைப் பாளிகளின் படைப்பாம்சத்தை உணர முடியும். பழைய தாமரை இதழ்களைப் பாதுகாத்து ஆய்வாளர்களுக்கும் இலக்கிய அபிமானிகளுக்கும் வழங்கி வரும் அறிவியல் தமிழறிஞர் இராம. சுந்தரம், கவிஞர் வாய்மைநாதன், புலவர், அ. ப. பாலையன் ஆகியோருக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

                                                                                                                                                  -இரா. காமராசு.