book

இமயத்து ஆசான்கள் - சுவாமி ராமா

Imayathu Aasangal

₹280+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புவனா பாலு
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :528
பதிப்பு :3
Published on :2012
ISBN :9788184026504
Out of Stock
Add to Alert List

நான் புத்தகப் பிரியன். சிறிய வயதிலிருந்தே நிறைய வாசிப்பவன். 6வது படிக்கும்போது முதல் முதலாக எங்கள் பள்ளிக்கு லைப்ரரி வந்தது. பள்ளித் தலைமை ஆசிரியரான என் அப்பா, எல்லோருக்கும் படிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று, மாணவர்கள் சிலருக்கு ‘லைப்ரரி மெம்பர், புத்தகத்தை இரவலாக எடுத்துச் செல்லுதல், படித்த பிறகு பள்ளி லைப்ரரியில் புத்தகத்தைத் திருப்பித் தருதல்’ என்பதை அறிமுகப்படுத்தினார்கள். நான் புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த விருப்பம் உடையவன் என்பதை அறிந்திருந்த என் அப்பா, எனக்கு ‘ஷேக்ஸ்பியரின் ஒரு நாடகத்தை தமிழில் ‘கழுதையின் காதல்’ (சரியாக நினைவில் இல்லை) என்பதாக வெளியிடப்பட்டிருந்த புத்தகத்தைக் கொடுத்தார்.  நான் அப்போதெல்லாம் கல்கியில் அப்போதுதான் வெளிவந்துகொண்டிருந்த சிவகாமியின் சபதம் தொடரை விரும்பிப் படிக்க ஆரம்பித்திருந்தேன் (எங்க அப்பா கல்கி வாங்கலை. அந்தத் தெருவில் இருந்த என் டீச்சர் வாங்கிக்கிட்டிருந்தாங்க. அங்கேயே உட்கார்ந்து படித்துவிட்டு வருவேன். அப்போதுதான் அந்த ஓவியங்களை தனியாக தொடரின் இடையில் முழு வண்ணத்தில் வெளியிடுவார்கள்).  என்னவோ அந்த ஷேக்ஸ்பியரின் நாடகம் அப்போ என்னைக் கவரவில்லை. அதுக்குக் காரணம் அந்த கலாச்சாரம் நம்முடையது இல்லை என்பதால் இருக்கலாம்.  இந்த ‘புத்தகப் பைத்தியம்’ எப்படி என் பள்ளி/கல்லூரிப் படிப்பைக் கெடுத்தது என்பதையெல்லாம் இங்கு எழுதப்போவதில்லை. வேலைக்குப் போக ஆரம்பித்ததும் சொந்தமாக புத்தகங்கள் வாங்க ஆரம்பித்தேன். அவ்வப்போது அவை தொலைந்துபோகும். பஹ்ரைனில் இருந்தபோது என்னிடம் நூற்றுக்கணக்கில் புத்தகங்கள் சேர்ந்திருந்தன. அனேகமாக அனைத்தையும் அங்குள்ள தமிழ் மன்றத்திற்குக் கொடுத்துவிட்டேன்.  அந்தக் கதையை இங்கு எழுதினால் ‘புத்தக அறிமுகம்’ செய்ய இடம் இருக்காது.