book

தொழிலாளர்கள் நலச் சட்டங்கள்

Thozhilalargal Nala Sattangal

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் சோ. சேஷாசலம்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788182011700
Add to Cart

நமது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண்கள் 19(1) (a) முதல் 19 (1) (g) ஏழு உரிமைகள் உள்ளன. பேசவும், எண்ணியதை வெளிப்படுத்தவும், ஆயுதங் களின்றி அமைதியாக ஒன்றுகூடவும், சங்கங்களையும், ஒருங்கிணைப்புகளை ஏற்படுத்தவும், இந்தியாவில் எந்தப் பகுதிக்கும் சென்று வரவும், இந்தியாவில் எந்த இடத்திலும் வாழவும் நிரந்தரமாக வசிக்கவும், சொத்து வாங்க, வைத்திருக்க, விற்க உரிமையும், எந்தத் தொழிலை, வியாபாரத்தை, உத்தியோகத்தை மேற் கொள்ளவும் என ஏழு உரிமைகள் வழங்கப்பட்டன. ஆயினும் அரசு கருதினால், அனைவரும் இந்த சுதந்திரங்களை அனுபவிக்குமாறு வகை செய்ய நியாயமான, ஏற்றுக் கொள்ளக்கூடிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தலாம். இவை சட்டமன்ற அதிகாரங்களால் இயற்றப்பட வேண்டும். வெறும் நிர்வாக ஆணையால் இயற்றப்படவியலாது. ஒரு லிமிடெட் கம்பெனி தனி நபரல்ல. தனி மனித உரிமைகள் இன்னொரு தனி மனிதரால் மீறப்படும்போது சாதாரண சட்டம் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டும். சில வழக்குகளின் தீர்ப்புகளை இங்கே கூறுதல் அவசியம்: