book

டிசம்பர் தர்பார்

December Dharbar

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788189780838
குறிச்சொற்கள் :தகவல்கள், சங்கீதம், பாடல்கள், நகைச்சுவை, அனுபவங்கள், கச்சேரி, அரங்கம்
Add to Cart

டிசம்பர் வருகிறதென்றால் ஒரு மாதத்துக்கு முன்பாகவே சென்னை தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்ளும்; விழா என்றால் சும்மாவா! அதுவும் இசை விழாவாயிற்றே. டிசம்பர் என்றாலே கச்சேரி, அரங்கேற்றம், கோலாகலம், கொண்டாட்டம்தான். அரங்குகளும் சபாக்களும் ஓய்வில்லாமல் விழித்துக்கொண்டிருக்கும். வயிற்றுக்கு ஈயப்படும் உணவைக் காட்டிலும், ரசிகர்கள் செவிக்கு இசை ஈயக் காத்திருப்பார்கள் கலைஞர்கள். வாத்தியங்களை வாத்தியக் கலைஞர்கள் கொஞ்ச ஆரம்பிப்பார்கள். அதுவும் கொஞ்சலில் மயங்கி, தவழ ஆரம்பிக்கும். தவழ்ந்துதவழ்ந்து இறுதியில், அதற்கு சொக்கி மயங்கிக்கிடப்பவர்களின் மடியில் வந்து உட்கார்ந்துக்கொள்ளும். அவர்களை தனது இசைக் கரங்களால் ஆரத்தழுவி, நடை பழக எத்தனிக்கும் குழந்தையைப் போல மடியிலிருந்து இறங்க அடம்பிடிக்கும். இசையும் நகைச்சுவையும் இணைந்து பிறந்த இரட்டையர். நகைச்சுவையை இசை குழைத்து வழங்கும் பக்குவம் சென்ற நூற்றாண்டில் இருந்து தொடர்ந்துவரும் பாரம்பரியம். ஆனந்தம் பரமானந்தம் என்றால் அது அதிகம் கிடைப்பது வெளியில் நடக்க கால்கள் இடறும் பனிக்காலத்தில்தான். பனி என்றால் அது டிசம்பர். டிசம்பர் என்றால் இசை. அந்த டிசம்பரில் நடக்கும் இசை தர்பாரைப் பற்றியதுதான் இந்நூல். அமெரிக்க வாழ் இந்தியரான நூலாசிரியர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் வருடந்தோறும் டிசம்பர் சீசனில் சென்னை வந்துசெல்லும் தனது அனுபவங்களை இந்நூல் வாயிலாக நகைச்சுவை தெரிக்கப் பதிவு செய்கிறார். இது இசை சீசனைப் பற்றி மட்டும் பேசாமல், அதையட்டி நடக்கிற சம்பவங்களையும் நிகழ்வுகளையும் சிரிக்கசிரிக்க வாசகன் அருகேயே கொண்டுவந்து நிறுத்தி மகிழ்விக்கிற நூலாகவும் இருக்கிறது. கச்சேரிகளையட்டி அரங்கத்தினுள் நிகழ்கிற சம்பவங்களைப் பற்றி வாசிக்கும்போது, அவற்றை கச்சேரியில் இருந்து நேரடியாகப் பார்ப்பது போன்ற பிரமை தோன்றுகிறது. பொங்கல், வடை, சாம்பாரின் சுவை முதல் அட்வான்ஸ்டு ராகங்களை அடையாளம் காண்பது வரை இசை கலா ரசிகர்களுக்கு இந்நூல் ஒரு தோழன்.