book

சத்குரு சேஷாத்ரி சுவாமிகள்

Sathguru seshathri swamigal

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா.சு. ரமணன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :144
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788189780845
குறிச்சொற்கள் :அற்புதங்கள், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், தகவல்கள்
Out of Stock
Add to Alert List

பஞ்சபூத ஸ்தலங்களுள் இறைவன் அக்னி ரூபமாகக் காட்சிதரும் மலை திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள அருணாசலேஸ்வரரை வணங்கி தவம் செய்தால் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த அக்னி மலையை மக்கள் வலம் வருகின்றனர்.

அம்மலையின் மத்திய பகுதியிலும் அடிவாரத்திலும் எண்ணிலடங்கா குகைகளும் ஆசிரமங்களும் நிரம்பியுள்ளன. பல முனிவர்கள் அவற்றில் தங்கி தவம் மேற்கொண்டு வருகின்றனர்.

தேடி வரும் பக்தர்களுக்கு, தவத்தின் மூலமாகப் பெற்ற ஞானத்தால் அருள்பாலித்து, சித்த புருஷர்களாக விளங்குகின்றனர் பல மகான்கள். அவர்களுள் குறிப்பிடத்தகுந்தவர் சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள். ஆச்சாரக் குடும்பத்தில் பிறந்து பூஜை புனஸ்காரங்களோடு வளர்ந்திருந்தாலும், குடும்ப வாழ்வில் நாட்டமின்றி திருவண்ணாமலை வந்து அருணாசலேஸ்வரரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசித்து சித்திநிலை பெற்றவர் சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள்.

அந்த மகானின் யோக வாழ்வை விவரிக்கும் வகையில் சிறப்பான நூலைப் படைத்துள்ளார் பா.சு.ரமணன். மகானின் பிறப்பு தொடங்கி திருவண்ணாமலை வந்து, தவம் செய்து முக்திபெற்றது வரை இந்நூலில் விவரித்துள்ளார்.

மகான் செய்த அற்புதங்கள், உபதேசித்த அருளுரைகள், அவரோடு நெருங்கி இருந்த அன்பர்கள் மற்றும் மகரிஷி ரமணரோடு இருந்த தொடர்பு என சத்குரு சேஷாத்ரி சுவாமிகளின் வரலாறு நமக்கு ஆன்மிக சக்தியை ஊட்டுகிறது.

யோக வாழ்வு வாழ்ந்த மகானின் வரலாறு புனிதமானது.படியுங்கள்... அருள் பெறுங்கள்.