புலியின் நிழலில் நாம்தேவ் நிம்கடே
Puliyin Nizhalil
₹390+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.எஸ்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :351
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789382033134
Add to Cartஇந்தியாவின் மேற்குப் பகுதியில் ஸாத்காவுன் என்ற கிராமத்தில் பிறந்தார் நாம்தேவ் நிம்கடே. பெற்றோர் நிலமற்ற அடிமை வேலையாட்கள். 14 வயதில் நாம்தேவ் தமது கிராமப் பள்ளியில் சேர்ந்தார். தீண்டப்படாதவர் என்பதால் வகுப்புக்கு வெளியே வெயில் அடிக்கும் வராந்தாவில் நின்றபடியே ஜன்னல் வழியாகப் பாடங்களைக் கற்க வேண்டியிருந்தது. 1962இல் நாக்புர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று அமெரிக்காவிலுள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் மண் இயல் குறித்து ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார். அம்பேத்கருக்குப் பிறகு அமெரிக்காவின் பல்கலைக்கழகமொன்றில் பட்டம் பெற்ற முதல் தலித் என்ற பெருமை இவருக்கு உண்டு. 1950களில் இந்திய விவசாய ஆய்வு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். வாழ்நாள் முழுவதும் அம்பேத்கரின் கொள்கையைப் பின்பற்றி வந்தார். தனது வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை இந்நூலில் பகிர்ந்துகொள்கிறார் நிம்கடே.