book

கால வெள்ளம்

Kaala Vellam

₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச. சுபாஷ் சந்திரபோஸ்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :378
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788177352306
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

கால வெள்ளம் என்ற இந்த நாவலின் ஆசிரியர்  முனைவர் ச. சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள், ஒரு முற்போக்கு எழுத்தாளர்.

'காலவெள்ளம்' என்ற இந்த நாவலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள பேராசிரியர் திரு. ச. திருஞான சம்பந்தம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"இதுவரை எழுதப்பட்டுள்ள வட்டார வழக்கு நாவல்கள் எவையும் இதற்கு ஈடாக.  பத்மாவதி குறிப்பிடுவதுபோல, தஞ்சை மாவட்ட மண் மணம் மிகுதியாக வீசுகிறது"


ஆசிரியரின் பாத்திரப் படைப்புகள் இயல்பாக அமைந்துள்ளன.  அவற்றில் நம்மை பெரிதும் கவரும் இரு பாத்திரங்கள் அழகப்பத் தேவரின் மகன் வீராசாமித் தேவரும் அவரது மூத்த சகோதரி செல்லம்மாவும்.

மற்ற பாத்திரப் படைப்புகளும் யதார்த்தமாக உள்ளன.  அந்த வட்டார மக்களின் பழக்க வழக்கங்கள் அவர்கள் (திருமணம், சாவு முதலியவற்றில்) கையாளும் முறைகள் ஆகியவை நாவலில் விளக்கப்படுகின்றன.

புதிய சூழ்நிலையில் விவசாயம், கலாசாரம் முதலியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களையும் அவற்றின் பாதிப்புகளையும் விளக்கப்படுகின்றன.