book

காதல் பால்

Kaathal Paal

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜி. கௌதம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :128
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788189780913
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, காதல், நினைவுங்கள்
Out of Stock
Add to Alert List

உலக அளவில் தமிழன் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய இலக்கியச் சாதனை திருக்குறள். அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்று மூன்று பிரிவுகளைக் கொண்டிருந்தாலும் இன்பத்துப்பால் மட்டுமே காதலைப் பாடுகிறது. எனினும், அறத்துப்பால், பொருட்பால் இரண்டிலும் காதல் கூறுகளைத் தேடும் கன்னிமுயற்சியே இந்தக் 'காதல் பால்.'
மழலையின் புன்னகை, உழைப்பாளியின் வியர்வை, காதலில் செல்லகோபம் இவை சொர்க்கத்தை பூமியிலேயே நிர்மாணிக்கக் கூடியவை. உலகை நேசிப்பதற்கான உயர்ந்த அடையாளம் காதல். ஒருவனின் மிருகத் தோலுரித்து அவனுக்குள் மனிதம் வளர்க்கவல்லது காதல்.

இந்நூலில், மனித வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை எடுத்துக்கொண்டு, அதனைக் குறளோடு ஒப்பிட்டுப் பார்த்திருக்கும் நூலாசிரியர் ஜி.கௌதம், தான் சொல்லியிருக்கும் கதைகளில் குறளின் சுயமுகம் மாறாமல் சுவைபட கையாண்டிருக்கிறார்.

கணவன் _ மனைவிக்கு இடையே இழையோடும் ஊடல், காதலன் _ காதலி மத்தியில் ஊடாடும் காதல், ஆணுக்கும்_ பெண்ணுக்கும் உறவுப் பாலமிடும் நெகிழ்ச்சியானத் தருணங்கள், சேரமுடியாத காதலின் ரணங்கள்... என ஒவ்வொரு கதையும் நம்மை 'நெருப்பின் பக்கம் நிறுத்தி தென்றலின் குளுமையைஒ உணரச் செய்கிறது.

அந்தவகையில் இது காதலுக்கான பொதுமறை. மேலும், இந்தக் கதைகளில் உலவும் காதல் பாத்திரங்களுக்கு தனித்தனியாக பெயரிடாமல் 'அவன்', 'அவள்' என்று அழைத்து கதை ஓட்டத்திற்கேற்ப நம்மையும் இழுத்துச் செல்வது இந்தப் புத்தகத்தின் சிறப்பு.

சொல்வதில் சுவை, சுவையோடு எளிமை என தனக்கென தனி பாணியில் எழுதும் ஜி.கௌதம், வாசிப்பவர்களின் தோள்களில் கை போட்டுக்கொண்டு சேதி சொல்லும் அருமையான எழுத்து நடையைப் பெற்றிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும் உங்கள் மனதை காதல் புரட்டிப்போடும் என்பது மட்டும் நிச்சயம்.