book

கோமகனின் காதல்

Komaganin Kadhal

₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாவி
பதிப்பகம் :ஜெனரல் பப்ளிஷர்ஸ்
Publisher :Jeneral Publishers
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :300
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

காதலுக்காக மகுடம் துறந்த மன்னரின் கதையைத் தொடங்கு முன், சில வார்த்தைகள். அரச குடும்பத்திலும், அரண்மனை வாழ்விலும் குறுக்கிட்ட காதல் சம்பவங்கள் எத்தனையோ உண்டு. அவற்றுள் எட்டாம் எட்வர்டின் காதல் உலகப் பிரசித்தமானது. அந்தச் சரித்திர நிகழ்ச்சியில், காதலுக்காக முடி துறந்த தியாகமும், இன்னும் சில இரகசியங்களும் பொதிந்து கிடக்கின்றன.
 எட்வர்ட் அரசர் தம்முடைய அன்புத் தாயையும் அருமைச் சகோதரர்களையும் பிரிந்து, அரண்மனை வாழ்க்கையைத்  துறந்து, சாம்ராஜ்யத்தையும், சாம்ராஜ்ய மக்களையும் இழந்து காதலி ஸிம்ப்சனின் கைகோத்து வெளிநாட்டுக்குச் சென்ற வரலாறு நிகழ்ந்து, கால் நூற்றாண்டு காலத்துக்கு மேலாகிவிட்டது. காலத்தின் போக்கில் தூசு படிந்து மங்களாகிவிட்ட அந்த வரலாற்று நிகழ்ச்சிகளைத் துடைத்துத் துலக்கிப் பார்க்கும்போது, அவற்றில் எத்தனையோ உண்மைகள் பளிச்சிடுகின்றன.
 பழம் பெருமைகளுக்கும் சம்பிரதாயச் சடங்குகளுக்கும் கீர்த்தி மிக்க பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் புராதனப் போக்கு, அந்தப் போக்கின் சிக்கலான பிடியைத் தகர்த்தெறிய முடியாத கோமகனின் தவிப்பு, பிரிட்டிஷ் மந்திரி சபையின் குறுக்கீடு, பத்திரிகைகளின் பிரசாரம், எட்வர்டின் ரேடியோ பிரகடனம் இவ்வளவும் இந்தக் கதைக்குள் அலைமோதிக் கொண்டு நிற்கின்றன.