இன்பக்கனா ஒன்று கண்டேன்
Inbakana Ondru Kandaen
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோ
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :95
பதிப்பு :3
Published on :2013
Add to Cartநான் பார்த்த முதல் சோ நாடகம் சமீபத்தில் 1972-ல் பம்பாய் ஷ்ண்முகாநந்தா ஹாலில். “இன்பக்கனா ஒன்று கண்டேன்” என்று அதற்கு பெயர். அதில் அவர் சமீபத்தில் 1968-ல் வெளி வந்த முக்தா பிலிம்சின் படம் பொம்மலாட்டத்தில் ஏற்று நடித்த ஜாம்பஜார் ஜக்கு மாதிரியான கெட்டப்பில் இந்த நாடகத்தில் வந்தார். மேடையில் சிறிது நேரம் பேசிவிட்டு ஆடியன்சில் வந்து உட்காருகிறார். அப்போது அவர் ஒரு கனவு காண்கிறார். அதில் ஒரு ஊரில் எல்லோருமே நல்லவர்களாக இருக்கிறார்கள். எல்லோருமே ஊரில் நல்ல நிர்வாகத்துக்காக பாடுபடுகிறார்கள். எல்லோருமே தூய வெல்ளை நிற உடை அணிந்து போகும்போதும் வரும்போதும் ஒருவருக்கொருவர் முகமன் சொல்லிக் கொள்கிறார்கள்.அதில் இருவருக்கும் மட்டும் வேலையில்லை. அவர்கள் நிர்வாகிகளுக்கான தேர்தல் வைக்கலாம் என ஆலோசனை கூறுகிறார்கள். திடீரென சோ அவ்ர்கள் “யோவ் நிறுத்தய்யா” என கத்திக் கொண்டே மேடைக்கு செல்கிறார். தேர்தல் நடக்காமல் தடுக்க பாடுபடுகிறார். கனவு அவருடையதாக இருக்கலாம் ஆனால் அவரது கனவு மாந்தர்கள் அவர் சொல்வதை கேட்கத் தயாராக இல்லை. தேர்தல் நட்க்கிறது. குளறுபடிகள் ஆரம்பமாகின்றன. முதல்வருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க சங்கதிகள் நகருகின்றன. கடையியில் சோ அவர்கள் பிடிவாதமாக கனவிலிருந்து விழிக்க எல்லா பாத்திரங்களும் மறைகின்றனர். அப்போது சோ ஒரு டயலாக் கொடுப்பார். “அத்தெல்லாம் சரி, ஆனாக்க முதல்லே பாத்தீங்களே, எல்லோரும் நல்லவங்களா இருக்கச்சே, அப்போ எவ்வளோ போர் அடிச்சது? அப்புறம்தானே ஒங்களுக்கே நாடகத்திலே சுவாரசியம் வந்தது” என்று கூற தியேட்டரே சிரிப்பில் ஆழ்ந்தது.