book

கச்சத் தீவு

Kachatheevu

₹199+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். முத்துக்குமார்
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sixth Sense Publications
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :168
பதிப்பு :2
Published on :2013
ISBN :9789382577621
Add to Cart

ஆதித் தமிழனின் காலடி மண்ணே இலெமூரியாக் கண்டம் அதுவே மாந்தரின் மரபையும் மொழியையும் பண்பாட்டை யும் உருவாக்கிய தமிழ் இனத்தின் தாயகம் அதுவே கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் இனத்தின் வாழ்விடம் காலத்தின் சுழற்சியால், கடற்கோள்கள் அடுத் தடுத்து நிகழ்ந்தன. கடற்கோள்கள் நிகழ்ந்த போதெல்லாம் தமிழர்கள் வாழ்ந்த இலெமூரியாக் கண்டத்தின் பல பகுதிகள் கடலில் மூழ்கின.'வடிவேல் எறிந்த வான்பகை பொறா பஃறுளி யாற்றுடன் பன்மலை செசிகித்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள.அதில் எஞ்சின முந்நீர்ப்பழந்தீவுகள் பன்னிராயிரம். அதில் ஒன்றே கச்சத்தீவு இத்தீவு கச்சை வடிவம் கொண்டது. எனவே இத்தீவுக்குக் 'கச்சத் தீவு" எனப் பெயர் வந்தது.
தமிழ்நாடு-தமிழ் ஈழம் இரண்டுக்கும் மையத்தில் இத்தீவு அமைந்தது.
கச்சத் தீவின் நீளம் 1கல். அகலம் * கல். தீவின் பரப்பளவு 285 ஏக்கர். இத்தீவு யாழ்ப்பாணத்திலிருந்து 70 கி.மீ. நெடுந்தீவிலிருந்து 28 கி.மீ. இராமேசுவரத் திலிருந்து 18 கி.மீ. தலைமன்னாரிலிருந்து 25 கி. மீ, படகில் செல்லும் போது இராமேசுவரம் கோபுரம் மறைந்ததும் கச்சத் தீவு கண்களில் படும். இராமேசு வரத்திலிருந்து கச்சத் தீவுக்கு விசைப் படகுப் பயணம், இரண்டு மணி நேரம் கச்சத்தீவின் புவியியல் அமைப்பு இது முட்டை வடிவில் இருக்கும் கடலில் தக்கையென மிதக்கும்.இத்தீவு நெடுங்கோடு 79° 41 படுக்கைக் கோடு 90 14 இவற்றின் சந்திப்பில் அமைந்துள்ளது. தீவின் மேற்கே உயர்ந்த பாறைகள் தெரியும். உட் பகுதியில் வெண்மணல் திட்டுகள் மிளிரும். ஆங்காங்கே குழிகளும் உண்டு. பசும்புல் தரைகளும் உண்டு. நடுப் பகுதி கல்லுமலை என அழைக்கப்படும். கடல் மட்டத் திருந்து கல்லுமலை 20 அடி உயரம்: அதன் அருகே ஆழ்கிணறு ஒன்று உண்டு, அதன் நீர், குடிப்பதற்கு நன்று தொடர்ந்து கனமழை பொழியும். செடி, கொடி அரும்பும் விண்ணில் பறவைகள் பறக்கும்! மண்ணில் பனிமலர் மணக்கும்!
கான் மலரில் வண்டுகள் பாடும் மீன், அருவியில் தாவியே ஒடும்!
இங்கு 'டார்குயின்" எனும் பச்சை ஆமைகள் இருந்தனவாம். அதனாலும் கச்சத்தீவைப் பச்சைத்தீவு என அழைத்தனராம். கச்சம் என்றால் ஆமை என்பர். அதனாலும் இத்தீவை, கச்சத்தீவு என்பர். இத்தீவின் பச்சை மேனியில், இச்சை கொண்டோர், "பச்சைத் தீவு! என மாம்பழச் சொல்லால் அழைத்தனராம். பச்சைத் தீவு மருவி "கச்சத்தீவு" என வழங்கப்படுகிறதாம்.