கரமாஸவ் சகோதரர்கள்
Karamaasav Sagotharargal
₹1350
எழுத்தாளர் :அரும்பு சுப்ரமணியன்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :1215
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789382033271
Add to Cartஉலகின் மகத்தான படைப்பாகிய ‘கரமாஸவ் சகோதரர்கள்’ நாவல் அதன் மூலமாகிய ரஷ்ய மொழியிலிருந்து நேரடியாகத் தமிழில் பெயர்க்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவில் பல்லாண்டுகள் வாழ்ந்து அம்மொழியையும் நிலப்பரப்பையும் பண்பாட்டையும் ஆழ்ந்து அறிந்து உணர்ந்தவர் மொழிபெயர்ப்பாளர். மூலமொழிக்கு நெருக்கமான தொடரமைப்புகளைப் பயன்படுத்தியும் நாவலின் சாரமான விவாதப் பகுதிகளையும் பைபிள் மேற்கோள்களையும் ரஷ்ய இலக்கியத் தொடர்களையும் மிகுந்த கவனத்தோடும் மொழிபெயர்ப்பாளர் தமிழுக்குக் கொண்டு சேர்த்துள்ளார். அசைவுகளையும் சொற்களையும் உளவியல் அம்சம் பொருந்த வார்த்திருக்கும் தஸ்தயேவ்ஸ்கியின் பாத்திர உருவாக்கங்கள் தமிழுக்கு இயைந்து வந்திருக்கின்றன. வாழ்வைப் பரிசீலிக்கத் தூண்டும் அவரது ஒவ்வொரு வரியையும் நுட்பமாக உள்வாங்கி சாரத்தைப் பிடித்திருக்கும் அரிய மொழிபெயர்ப்பு இது. பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவலான இதைத் தமிழின் மரபான சொல்லாட்சிகளும் நவீனச் சொற்களும் கலந்துவரும் வகையில் உருவாக்கியிருப்பதன் பொருத்தத்தை வாசிப்பு தெளிவாக உணர்த்தும்.