book

அறிவியல் கட்டுரைகள்

Ariviyal Katuraigal

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர்.க. பூரணச்சந்திரன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :119
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788188048618
குறிச்சொற்கள் :கண்டுபிடிப்பு, பொது அறிவு, தகவல்கள்
Add to Cart

 இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் அறிவியல் துறை சிறப்பாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. இந்தியாவில் இருந்து அயல்நாடுகளுக்குச் செல்வொருள் தமிழ்நாட்டு அறிவியலாளர்களுக்கும் பொறியியலாளர்களுக்குமே முதலிடம், மேலும் வேலை வாய்ப்புக்கு உறுதுணையாக இருப்பதால் மாணவர்கள் அறிவியலையே விரும்பிக் கற்கின்றனர். இவ்வாறு அறிவியல் கல்வி சிறப்பான இடத்தைப் பெற்றும், அறிவியல் நோக்கும் அறிவியல் மனப்பான்மையும் வளர்ந்திருக்கிறதா என்றால் அதுதான் இல்லை. அறிவியல் படித்தோரிடமும் ஏராளமான மூட நம்பிக்கைகள், அறிவியலுக்கு மாறான சிந்தனைகள் ஊறிக் கிடப்பதைக் காண்கிறோம்.

 உண்மையில் அறிவியல் கல்வி முதன்மையாக அறிவியல் நோக்கையும் அறிவியல் மனப்பாங்களையும் அளிக்க வேண்டும். இன்று அவ்வாறு இல்லாததற்கு அடிப்படையாக உள்ள பல காரணங்களுள் தாய்மொழி வாயிலாக அறிவியலைப் புரிந்து கொண்டு கற்காத்தும் ஒன்று. எவ்வளவு சிக்கலான கருத்துகளையும் தமிழில் திறம்படச் சொல்ல முடியும் என்பதை உணர்த்துவதற்கான ஒரு சான்றாக இக்கட்டுரை நூல் அமைகிறது. அறிவியல் கல்வியின் நோக்கம் ஆய்வுத் திறன்ற்ற மன்பாட முறையாக இருக்கக் கூடாது என்பதை ''நியூட்டனின் கட்டளைகள்'' என்னும் முதல் கட்டுரை விளக்குகிறது.