அதிசயங்களும் மர்ம ரகசியங்களும்
Athisayangalum Marma Ragasiyangalum
₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜி.எஸ்.எஸ்.
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :150
பதிப்பு :4
Published on :2016
ISBN :9788184765984
Add to Cartமனிதனால் படைக்கப்பட்ட பைசா நகரத்து சாய்ந்த கோபுரம், தாஜ்மஹால், பாரிஸின் ஈஃபிள் டவர், சீனப் பெரும் சுவர், எகிப்திய பிரமிடு, ரோமின் கொலோசியம், அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டடம் போன்றவற்றை நாம் உலக அதிசயங்கள் என்கிறோம். மனிதனின் செயற்கறிய சிறந்த செயல்களும், அவனால் படைக்கப்பட்ட தனிச் சிறப்பு வாய்ந்த படைப்புகளும் அதிசயங்கள் என்றே அழைக்கப்பட்டுவருகின்றன. அறியப்படாத அதிசய ரகசியங்கள் உலகத்தில் இன்னும் எத்தனையோ உள்ளன & சிதம்பர ரகசியத்தைப்போல. ஆனால், சில ரகசியங்கள் ஆண்டுகள் பல கடந்து வெளியாகியிருக்கின்றன. அவ்வாறான அதிசயங்களில் பல்வேறு மர்மங்கள் புதைந்திருக்கின்றன. புகழ்பெற்ற மனிதர்களுக்குப் பின்னே ரகசியங்கள் ஒளிந்துகொண்டு இருக்கின்றன. மாவீரன் நெப்போலியனின் இறுதி நாட்கள் எப்படி இருந்தன? அவன் மரணத்தின் மர்மம் என்ன? காலத்தை வென்று நிற்கும் கல்லறைகளான பிரமிடுகளில் ஒளிந்திருப்பவை எவை? சீனப் பெரும் சுவர் சொல்லும் கதை என்ன? விமானங்களை விழுங்கும் பெர்முடா முக்கோணத்தின் ரகசியம் எப்படிப்பட்டது? மூக்கின் மேல் விரலை வைக்கும் அதிசயங்களின் ரகசியங்களை இந்த நூலில் போட்டு உடைத்திருக்கிறார் நூல் ஆசிரியர். பொது அறிவுப் பொக்கிஷமாக போற்றிப் பாதுகாக்க வேண்டிய இந்தப் புத்தகத்தை படியுங்கள். மர்மங்கள் சூழ்ந்த அதிசய உலகின் ரகசிய தரிசனம் உங்களுக்குக் கிடைக்கும். நீங்களும் அதிசயம் அடைவீர்கள்.