கண்ணன் பாட்டு
Kannan Paatu
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வை. கோவிந்தன்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :54
பதிப்பு :2
Published on :2007
ISBN :9788188048311
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Add to Cartபாரதி கண்ணனைப் பலவடிவங்களில் காணுகிறார். அவர் கண்ட காட்சிகளை நமது கண்முன் நிறுத்திக் காட்டுகிறார். உண்மை தவறி நடப்பவரை உதைத்து நசுக்கும் தோழனாய், வேண்டிய புகழ்வாழ்வும் பெருமையும் கொடுத்திடும் தாயாய், அன்பினைக் கைகொள்ளச் சொல்லும் தந்தையாய், காசு பெரிதில்லை என்று சொல்லும் சேவகனாய், தீமையை விலக்கும் அரசனாய், ' தொழில் பல புரிவேன் ' எனச் சொல்லும் சீடனாய், சத்தியம் கூறும் சற்குருவாய், ஊரார் புகழும் குழ்ந்தையாய், நல்லவன்போல் நடக்கும் விளையாட்டப் பிள்ளையாய், சாந்தி தரும் காதலனாய், வருத்தமில்லாமல் செய்யும் காந்தனாய், வீரத்தன்மை தரும் காதலியாய், பகை தொலைத்திட வேண்டத்தக்க ஆண்டானாய், தீமையை ஒட்டிடச் சரண்டையத்தக்க குலதெய்வமாய்ப் படைத்துக் காட்டுகிறார்.
உலகில் உள்ள உறவுகளெல்லாம் இறைவடிவமே என்ற உயர்ந்த தத்துவத்தைக் '' கண்ணன் பாட்டு '' என்ற தலைப்பில் அடக்கிக் காட்டுகிறார் பாரதி. பாரதியின் கண்ணன் பாட்டை மட்டும் தனியாகப் பிரித்துச் சிறிய நூலாக வெளியிடுகிறோம். பல நல்ல நூல்களைப் படைத்தும் குறைந்த விலைகளில் நல்ல நூல்களைப் பதிப்பித்தும் தமிழுலகுக்குத் தொண்டாற்றிய அறிஞர் பெருமகனார். வை. கோவிந்தன் அவர்களைப் பாரதியின் புதல்விகளான திருமதி தங்கம்மா பாரதி, திருமதி சகுந்தலா பாரதி இருவரும் சந்தித்து, பாரதியின் கவிதைகளை வெளியிடக் கேட்டுக்கொண்டதை ஏற்று அவர் தொகுத்த '' மகாகவி பாரதியார் கவிதைகள்'' என்னும் நூலிலிருந்து இப்பகுதி பிரித்தெடுக்கப்பட்டுப் பிழையின்றி வெளியிடப்பட்டுள்ளது. வாசகர்களின் வசதி கருதி குறைந்த விலையில் வெளிவரும் இந்நூலிக்கு நிறைந்த ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்.