ஐரோப்பா வழியாக
Europa Valiyaga
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ.கே. செட்டியார்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :160
பதிப்பு :6
Published on :2010
Add to Cartதன் பயண நூல்களால் தமிழ் இலக்கியத்தில் ஒரு திருப்புமுனையை அமைத்தவர் ஏ.கே.செட்டியார் என்று அழைக்கப்பட்ட அ.கருப்பன் செட்டியார். அவர் தற்போதைய சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செட்டிநாட்டுப் பகுதியான கோட்டையூரில் 03.11.1911 ஆம் நாள் பிறந்தார். திருவண்ணாமலை யில் படித்துக் கொண்டிருக்கும் போதே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். மகாத்மா காந்தியைத் தமது தலைவராக ஏற்றார். தமது இருபதாவது வயதில் மியான்மரின் (பர்மா) தலைநகரமான ரங்கூனில் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் வெளியிடப்பட்ட ‘தனவணிகன்’ என்ற இதழுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்தார். புகைப்படக் கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, 1930 ஆம் ஆண்டு ஜப்பான் சென்று ‘இம்பீரியல் ஆர்ட்ஸ் கலாசாலையில்’ சேர்ந்து புகைப்படக் கலையில் தேர்ச்சி பெற்றார்.
இரண்டாம் உலகப் போர் வெடிக்கவிருந்த நெருக்கடியான தருணம் இது என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். கூடவே, அவர் நிறவெறியையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. விடுதிகளில் அறை கொடுக்க மறுத்த முதலாளிகள்; பயணச்சீட்டு விற்க மறுத்த கப்பல், ரயில், விமான முகவர்கள்; அவமானப்படுத்திய பணியாளர்கள் – இவர் களைப் புறங்கண்டே ஏ.கே.செட்டியார் தம் பணியை மேற் கொள்ள வேண்டியிருந்தது.
படங்களைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பெரிய விடுதிகளிலேயே ஏ.கே.செட்டியார் முதலில் தங்குவார். காரியம் முடிந்ததும் மலிவான விடுதிக்கு இடம்மாறிவிடுவார். குறைந்த நிதி ஆதாரத்தைக் கொண்டு காந்தி படத்தை உருவாக்கிய ஏ.கே.செட்டியார், செலவினங்களில் கறாரான சிக்கனத்தையும் நேர்மையையும் கடைப்பிடித்தி ருக்கிறார். செலவழித்த ஒவ்வொரு காசுக்கும் அன்றன்றே கணக்கு எழுதியிருக்கிறார். ஹாலிவுட்டில் படத்தைத் தயாரித்து, உலகப் பிரமுகர்களுக்கு அரங்கேற்றக் காட்சியைத் திரையிட்டுவிட்டு, நியூயார்க் புறப்படு முன்னர் வாஷிங்டன் விமான 0நிலையத்தில் படுத்துறங்கியிருக்கிறார்!அந்த ஆவணப்படத்தைப் பலர் அதிகத் தொகைக்குக் கேட்டும் அவர் தரவில்லை. அப்படத்தை இந்திய அரசிடமே ஒப்படைத்துவிட்டார் என்பது வரலாற்றுச் செய்தி ஆகும்.
இதழாளராக, எழுத்தாளராக, புகைப்படக் கலைஞராக, ஆவணப்படத் தயாரிப்பாளராக விளங்கி, தமிழகத்துக்குப் பெருமைச் சேர்த்த ஏ.கே.செட்டியார், தமது எழுபத்திரெண்டாவது வயதில், 10.09.1983 ஆம் நாள் சென்னையில் காலமானார். பயண இலக்கிய வரலாற்றின் முன்னோடியான ஏ.கே.செட்டியாரின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும்.