அன்றும் இன்றும்
Andrum indrum
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆ. சிலுவைமுத்து
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :189
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788188048649
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு,
Add to Cartஅருள்தந்தை ஆ.சிலுவைமுத்து. ச.ச. அவர்கள் மதுரை அமெரிக்கா கல்லூரியில் என்னிடம் தமிழ் மாணாக்கராகப் பயின்றவர்கள். அவர்களின் நூல் இது என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
எழு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 'சங்க கால இளைய சமுதாயம்' இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டுரை. இளைஞர் என்போர் இந்த வயது தொடங்கி இந்த வயது முடிய ( ப.6 ) என்று இந்திய அரசு சொல்லும் வரையறையும் வைத்துக் கொள்கிறார். சங்க காலத்தில் வாழ்ந்த இளம் ஆண், பெண்களின் வீரம், துணிச்சல், பொருள் அறிவு, தொழில் முனைப்பு, வாய்மை, தூய்மை பற்றிய இலக்கயச் சான்றுகளை விரிவாகக் காட்டி, இன்றைய மூத்தவர் கடமையையும்
( ப. 34 ) சுட்டிக் காட்டுகிறார்.
கடந்த எழுபது ஆண்களில் தமிழர்களின் பொற்கால வாழ்க்கை பற்றிய கனவுகள் தமிழகத்தில் பெருகின. சங்க காலந்தான் அந்தக் காலம் என்ற நம்பிக்கையும் பிறந்தது. அந்த நம்பிக்கையில் இந்த ஆசிரியருக்கும் முழுஈடுபாடு இருக்கக் காணலாம். ( ப.163) இலக்கியத்தில் மனித நேயம் என்ற கட்டுரையில் உணர்தல், உதவுதல், உடனித்தல் என்னும் துணைத் தலைப்புகளில் பல்வேறு இலக்கிய மேற்கொள்கள் பசிப்பிணியைப் போக்கவும், மானிட சமூகம் ஒன்று என்று உணர்த்தவும் அழகாகக் காட்டப்படுகின்றன.