இங்கேயும் ஒரு சொர்க்கம்
Ingeyum Oru Sorkam
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறிவியல் நம்பி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :456
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177354812
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, முயற்சி, உழைப்பு, முன்னேற்றம், நாவல்
Add to Cartசம்பவங்களாக துவங்கும் இந்த நாவல்களம் உலக நாடுகளில் நடந்தேறும் சம்பவங்களுடன் கோர்க்கப்பட்டு விரிந்து செல்கின்றது. எல்லா சாதிக் கலவரங்களுடன் கோர்க்கப்பட்டு விரிந்து செல்கின்றது. எல்லா சாதிக் கலவரங்களும், இன மோதல்களும் ஒரு சில ஆதிக்க சக்திகளின் சுய லாபத்துக்காவும் ஆதாயங்களுக்காகவும் நடைபெறுவனதான் என்பதை நாவலாசிரியர் மிகப் பிரமாதமாக புதினமாக்கியிருக்கியிருக்கின்றார். சமூக அக்கறையுடன் உண்மைக்காகவும், நீதிக்காகவும், தேசத்திற்காகவும் நின்று போராடும் கதாபாத்திரங்களை உயிர்ப்புடன் வார்த்தளித்துள்ளார்.
திடீர் பாய்ச்சலில் இந்தியா முன்னேறுவதற்கான விஞ்ஞானக் கண்டுபிடிப்பினை நிகழ்த்திய விஞ்ஞானியிடமிருந்து, ஆய்வு ரகசியத்தை திருட முயலும் சதிகாரர்களிடமிருந்து அந்த புதிய கண்டுபிடிப்பை மீட்பதற்காகவும் தேசத்தின் இறையாண்மையைக் காப்பதற்காகவும் கதாநாயகன் அருண் நடத்தும் போராட்டம் 'கத்திமேல் நடப்பதாக' அமைந்து மெய் சிலிர்க்க வைக்கின்றது. ஒரே சமயத்தில் புலனாய்வுக் கதையாகவும், சமூக நாவலாகவும், அறிவியல் புனைகதையாகவும் கதை வளர்ந்து பின்னி பிணைந்து ஒவ்வொரு அத்தியாயத்திலும் எதிர்பார்ப்பை அதிகரித்து ஆவலைத் தூண்டும் விதத்தில் சிறுவர் முதல் பெரியவர் வரை படிக்கத் தகுந்த நாவலாக நாவலாசிரியர் படைத்துள்ளார். இது மிக நீண்ட கால உழைப்பில் உருவானதென்று கருதத்தக்க நல்ல நாவலாகும்.