கைத்தலம் பற்றிய கடவுளர்
Kaithalam patriya kadavular
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரபுசங்கர்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :79
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788189936174
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
Add to Cartகதா காலக்ஷேபங்கள் என்ற உத்தி மூலம் இறை சிந்தையில் காலம் கழிப்பதற்கான வழிமுறைகளை நம் முன்னோர் ஏற்படுத்தினர். காலக்ஷேபம் என்றால் காலம் கழித்தல் என்று பொருள். சில ஆண்டுகளுக்கு முன் வரை இந்த உத்தியே நம் நாட்டில் இருந்து வந்துள்ளது.
இறைவனின் கல்யாண குணங்களை கதைகள் வடிவில் சொல்லி, உபந்யாசங்கள் மூலம் மக்களுக்குப் பரப்பினர். பார்வதி பரிணயம் என்பதோடு, சீதா கல்யாணம், ருக்மிணி கல்யாணம், வள்ளி திருமணம், ஆண்டாள் திருக்கல்யாணம் என்று மகளிரை மையமாக வைத்து இறைவனை அடைந்தவர் கல்யாணங்களை வீடுகளிலும், கோயில்களிலும், பொது இடங்களிலும் நடத்தி அழகுபார்த்து பக்தி செலுத்துவதை நாம் கண்டிருக்கிறோம். இத்தகைய நிகழ்வுகளில் மந்திர ஸ்லோகங்களோடு அந்த அந்த தெய்வத்தின் திருக்கல்யாணக் கதைகளையும் கேட்பது மரபு.
வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார் என்பார்கள். கல்யாணம் செய்வது என்பது சாதாரண காரியமல்ல என்றும், அது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது; எனவே அதற்கு தெய்வ அருள் தேவை என்றும் நம்புகிறோம். இறைவனின் கல்யாணக் கோலக் காட்சியை தரிசனம் செய்து துதித்தாலும், தெய்வத் திருமணங்கள் தொடர்பான கதைகளைக் கேட்டாலும் பாராயணம் செய்தாலும் திருமணத் தடைகள் விலகும் என்றும், நல்ல வகையில் வரன் அமையும் என்றும் சொல்வார்கள் பெரியவர்கள்.
அந்த வகையில் நம் நாட்டில் பாரம்பர்யமாக சொல்லப்பட்டு வரும் தெய்வத் திருமணக் கதைகளை எளிய வடிவில் தந்திருக்கிறார் இந்த நூலாசிரியர். கதைகளைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் இருப்போருக்கு மட்டுமல்லாமல், தங்கள் இல்லங்களில் சுபகாரிய நிகழ்வுகளுக்காகக் காத்திருக்கும் அன்பர்களுக்கும் இந்த நூல் சிறந்த விருந்தாக அமைந்திருக்கிறது.