ஆளுமை மேம்பாடு
Aalumai Mempaadu
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். சுந்தரசீனிவாசன்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :பொது
பக்கங்கள் :152
பதிப்பு :3
Published on :2008
ISBN :9788190730822
Add to Cartநாடு, வீடு, நிறுவனம் இவற்றை நிர்வாகம் செய்கின்றவர்களின் மனம் நன்மையே செய்யவேண்டும், நல்லதே நடக்கவேண்டும் என்ற எண்ணத்தில் மிகுந்து நின்றால் அவருடைய ஆளுமைத்திறன் சில குறைகளுக்கு ஆளானாலும் நிறைவுத்தன்மையே அதிகமாக இருக்கும் ய்ய உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்'' என்ற சொற்களுக்குள் வள்ளுவர் நிர்வாகத்திறமையை அடக்குகிறார். உழைப்பவர்களின் நலன் கருத வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தால் மேலாண்மை சிறப்பாகவே இருக்கும். அந்த மேலாண்மை ஒவ்வொரு தொழிலாளியின் உள்ளத்திலும் புத்துணர்ச்சியும் புதுப்பொலிவும் ஊட்டி அதிக லாபத்தை ஈட்டித்தரும்.
வரவு குறைவாக இருந்தாலும் கேடில்லை, செலவு அதிகமில்லாமல் இருந்தால் நாடு, வீடு, நிறுவனம் மூன்றுமே நல்வளம் பெறும் என்பதை வள்ளுவர் பெருமான் ஆகாறு ( வரவு), போகாறு ( செலவு) என்ற சொற்களில் அடக்கிக்காட்டுகிறார். நாட்டு நிர்வாகத்தில் வீண், விரய, விழாச்செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டால் டாஸ்மாக் மூலம் அரசுக்குக் கோடிக்கணக்கான வருமானம் வரலாம். அதே நேரத்தில் லட்சக்கணக்கான கேடிகள் உருவாகி நாட்டின் மானம் குன்றும் நிலை நேர்கிறது.