book

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

India Arasiyalamaippu Sattam

₹320+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :376
பதிப்பு :3
Published on :2010
ISBN :9788188049363
குறிச்சொற்கள் :சட்டம்
Add to Cart

வழக்கறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்கள் புதுமை மற்றும் தனித்துவம் மிக்கவர். தமிழ் மொழிமேல் தனிப்பற்றுக் கொண்டவர். நீதிமன்றங்களில் முதன் முதலில் தமிழில் வாதாடியவர். ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்வதற்கு முன்னர் நீதி நிர்வாகங்கள் அந்தந்தப் பகுதியிலுள்ள இந்திய மொழிகளில்தானே நடந்துவந்தன என்று கூறி இந்திய மொழிகளை ஆங்கிலம் விழுங்கிவிடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார். அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை ஆங்கிலம் புறம் தள்ளிவிடக்கூடாது என்று தமிழர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டும் வகையில் சட்ட நூல்களைத் தமிழில் வரைந்துவருகிறார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டங்கள் இந்திய மொழிகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று ஆதங்கப்படுகிறார். இவர் எழுதிய இந்துத் திருமணச் சட்டம் என்னும் நூலுக்குத் தமிழ் வளர்ச்சித் துறையின் முதல் பரிசு கிடைத்துள்ளது. பிற மொழியின் வால்பிடித்து வாழாமல் தமிழ் மகுடம் சூடித் தனிப்பெருமை பெறும் வகையில் ' The Constitution of India' என்ற நூலை இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்துள்ளார்.