book

அமர்த்தியா சென் - ஓர் அறிமுகம்

Amarthiyasen -Oar Arimugam

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி. ரமேஷ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :124
பதிப்பு :2
Published on :2007
ISBN :9878123408604
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை
Add to Cart

பேராசிரியர் அமர்த்தியாசென் வளர்ச்சி குறித்த பொருளாதாரப் பேராசியர் இந்தியாவிலும், உலகமெங்கும் நன்கு அறியப்பட்டவர். சந்தைப் பொருளாதாரத்தின் தீமைகளை எதிர்த்துப் போராடி வருபவர். வளர்முக நாடுகளின் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் எழுப்பும் அறிவுத்துறைப் போராளி. கல்வியும், ஜனநாயகமும் மட்டுமே மனித குலத்தை மேம்படுத்தும் என்ற உறுதியோடு செயல்படுகிறவர். மத-சாதியப் பழக்கம் வாதங்களைச் சாடும் தீரர்.

 பசி, பஞ்சம், வறுமை போன்றவை மீதான அவரது ஆய்வுகள் கல்லாமை, சமத்துவமின்மை ஆகியவற்றைக் களையும் நோக்கம் கொண்டவை. தற்போதைய சந்தை தாராளவாதத்தின் கோரமுகத்தை எதிர்த்துவரும் சென்னின் கருத்துகள் பொருளாதார சீர்திருத்தத்தின் தீமைகளை வீழ்த்த வல்லவை. அவர் நோபல் பரிசு பெற்று ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும் தமிழில் ஒரு பொதுமான அறிமுகம்கூட இல்லாத நிலையே நிலவுகிறது. இத்தகைய தேவையை நிறைவு செய்யவே இந்நூல் எழுதப்பட்டது.