செட்டிநாடும் செந்தமிழும் (கணியன் பூங்குன்றன் காலம் முதல் கவிஞர் கண்ணதாசன் காலம் வரை)
Chettinadum senthamizhum
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோமலெ
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :716
பதிப்பு :2
Add to Cart‘‘எல்லா நாடும் தன் நாடாய், எங்கும் சுற்றி ஆராய்ந்து
நல்லார் பலரின் கருத்தையெலாம் நாளும் தேடித் தமிழ்மக்கள்
பல்லார் அறியச் செந்தமிழில் பண்பாய் உரைக்கும் என்நண்பன்
சொல்லால் அமுதை வெற்றிடுவோன் சோம லக்கு மணன்வாழ்க’’
என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ‘‘சோம.லெ’’ எனப்படும் சோம.லட்சுமணன்
அவர்களைப் பாராட்டுகிறார். இப்பாடலில் பயண இலக்கிய முன்னோடியாக விளங்கியவர்
சோம. லெ. என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. ‘‘பல்லார் அறியச் செந்தமிழில்
பண்பாய் உரைக்கும் என் நண்பன்” என்று கவிமணி தன் நண்பனாக செந்தமிழ்
வளர்ப்பவராக சோம .லெ அவர்களைக் காணுகிறார். சோம.லெ அவர்களுக்கும்
செந்தமிழுக்கும் நீங்காத தொடர்பு உண்டு. அவர் எழுதிய செட்டிநாடும்
செந்தமிழும் என்ற நூல் நகரத்தார்தம் தமிழ்ப்பணிகளை இனிய தமிழில் கணியன்
பூங்குன்றனார் காலம் முதல் கவிஞர் கண்ணதாசன் காலம் வரையான கால எல்லையில்
விவரிப்பதாக உள்ளது. இதே நூலின் தடத்தில் கவிஞர் கண்ணதாசனுக்குப் பின்னான
காலத்தை எழுதுவதற்கான களம் விரிந்து கிடக்கிறது.