book

கனகை

Kanakai

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.கா. அரங்கசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்
பக்கங்கள் :179
பதிப்பு :7
Published on :2008
ISBN :9788123404332
குறிச்சொற்கள் :பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல், நாடகம்
Add to Cart

சிலப்பதிகாரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய நாடகக் காப்பியம். தமிழில் நமக்குக் கிடைக்கும் முதல் நாடக காப்பியம் இதுவே. இதனையடுத்து ஏறத்தாழ ஆயிரத்து எழுநூறு ஆண்டுகள் தமிழில் நாடக நூல்கள் தோன்றாமலே போயின. 19-ம் நூற்றாண்டில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய மனோன்மணீயம் அடுத்து நமக்குக் கிடைக்கக் கூடிய செய்யுள் நாடகமாகும். அவரையடுத்தும் செய்யுள் நாடகம் இயற்றும் முயற்சி குறிப்பிடத்தக்க உந்துதல் பெறவில்லை. அண்மைக் காலத்தில்தான் இத்துறையில் எழுத்தாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். என் இனிய நண்பர் அரங்கசாமி. ' கனகை' என்ற இச்செய்யுள் நாடகத்தை இயற்றித் தந்துள்ளதன் மூலம் நாடக வளர்ச்சிக்குப் பெருந்தொண்டாற்றியுள்ளார்.

 எல்லோரும் அறிந்த இராமாயண காப்பியத்தில், செய்ந்நன்றி மறவாச் செம்மலாக விளங்கு கும்பகர்ணனை மையமாகக் கொண்டு, தம்முடைய புலமை ஆரம் கொண்டு நண்பர் வரைந்துள்ள செய்யுள் வட்டமே இந்த இனிய நாடகம்.

 நண்பர் அவர்கள் தமிழ் இலக்கியச் சோலையில் நுழைந்து, கம்பனில், புகுந்து சைவசமயச் சாத்திரங்களை துழாவி, பாரதியின் நடை எளிமையில் தாவி, பாரதிதாசனின் யாப்பு மிடுக்கினை உண்டு, கவிதைத் தென்றலாக வீசுவதை இந்நூல் நன்கு வெளிப்படுத்துகின்றது.