book

பல்நோக்குப் பார்வைகள்

Palnokku Paarvai

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா. மீனாட்சிசுந்தரம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :151
பதிப்பு :4
Published on :2005
ISBN :9788123407531
குறிச்சொற்கள் :திறனாய்வு, தொல்லியல், நாட்டுப் புறவியல், பயண இலக்கியம், வாழ்க்கை வரலாறு இலக்கியம்
Add to Cart

உலகில் எவ்வளவு மக்கள் இருக்கிறார்களோ அவ்வளவு தனித்தன்மைகளும் உண்டு. கண்ணாடி முன் எவர் நிற்பினும் அவர் முகத்தையே அதுகாட்டும். அது கண்ணாடியின் குற்றமா? அல்லது பார்ப்பவர் குற்றமா? ஒரு வரும் குற்முடையாரல்லர். ஏனெனில் எல்லாம் அறிந்தவரும் ஏதும் அறியாதவரும் இந்த உலகில் இல்லை. இவ்வாறிக்கக் கருத்துவேறுபடும்போது எண்ணிப்பார்க்க வேண்டுமேயல்லாமல் மனத்தில் வேறுபாடு கொள்வது அறிவின் வளர்ச்சியைத் தடுக்கும். மனித நேயத்தைக் கொல்லும். இந்தக் கருத்தை அறிவியல் வைத்துப் பல்நோக்குப் பார்வைகளை அணுகவேண்டுகிறேன். அறியாமையையும் அறிவையும் சீர்தூக்கி அலசிப் பார்க்க வேண்டுகிறேன். நோக்கு என்பதும் பார்வை என்பதும் ஒரே பொருள் கொண்டவை அல்ல. ஒன்றை - ஒருகருத்தை உள்ளே வைத்துக் குறிப்பில தைத்துக் கண்வழி வெளிப்படுத்துவது நோக்காகும். மேலோட்டமாக வெளிப்படுவதை மேல் தோற்றத்தை மட்டும் உணர்ந்து காண்பது பார்வையாகும். பார்க்கப்படுவது பார்வையாகும். எனவே பலநோக்கிங்களில் நான் பார்த்த பார்வைகளைப் பன்னிரண்டு கட்டுரைகளாக உருவாக்கி இந்நூலில் தந்துள்ளேன்.