மஞ்சி விரட்டு
Manji viratu
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கொத்தமங்கலம் சுப்பு
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788189936402
குறிச்சொற்கள் :கிராமம், தொகுப்பு, சிந்தனைக்கதைகள், நகைச்சுவை, சிரிப்பு
Add to Cartமண்ணின் மணத்தோடு கூடிய சிறுகதைகளின் தொகுப்பு இது. சுதந்திர காலத்துக்கு முந்தைய மனிதர்கள் நடமாடும் இந்தக் கதைக் களனில், மக்களின் யதார்த்த வாழ்க்கை அதன் இயல்புடனே படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கிறது. அதேநேரம் கற்பனைப் படகின் வேகமும் இதில் நிறையவே இருக்கிறது.
சமூகக் கருத்துகளை சுளீர் சாட்டையடியாகச் சொல்லும் அதேநேரம், அந்தக் காலத்து மனிதர்களின் பளீர் நையாண்டிகளும் ஹாஸ்யங்களும் ரசிக்க வைக்கின்றன. பாத்திரங்களின் சிந்தனையில் கதை சொல்லப்படும்போதே, நடுவே இடம்பெறும் நாடக பாணி பேச்சு நடை, சிறுகதைகளின் வேகத்தை அதிகப்படுத்துகிறது. வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட இந்தக் கதைகளில் மக்களின் மனநிலையில் எழுந்து அடங்கிய மாற்றங்களையும் கோடிட்டுக் காட்டியபடியே சென்றிருக்கிறார் கொத்தமங்கலம் சுப்பு.
கற்பனைக் கதைகளில் கடவுளர்களையும் கையாண்ட சுப்பு, அதை நகைச்சுவைக்குப் பயன்படுத்தியதில் புருவம் உயர்த்த வைக்கிறார். சுவைக்கு அடிமையாகி மெல்லும் புகையிலுக்கு இப்படி ஒரு பின்னணியும் இருக்குமோ என்ற நினைப்பே, மேலும் சுவாரஸ்யப்படுத்துகிறது. 16 வகை செல்வங்கள்போல வெளியாகி இருக்கும் இந்தச் சிறுகதைகள் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு சுவை!