இந்திய-சீன எல்லைத் தகராறு மறு ஆய்வும் தீர்வும்
India-china Ellai Thagararu Maru Aayvum Theervum
₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி. ஞானையா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :234
பதிப்பு :1
Published on :2008
ISBN :9798123414057
Add to Cart " 3000 ஆண்டுகளாக கலாச்சார நட்புறவும் 3500 கி.மீ. நீள பொது எல்லையும் கொண்ட உலகப் பெருநாட்டுடன் இந்தியாவின் உறவு 1960களில் ஏன் கடுமையாக பாதிக்கப்பட்டது? நமது இயற்கையான (Natural Ally) நட்புநாடு சீனாவா, அமெரிக்காவா? உலக மக்கள் தொகை 650 கோடியில், 230 கோடி அதாவது 35 விழுக்காட்டைக் கொண்ட இருபெரும் நாடுகள். எதிர்கால வல்லரசுகள், மோதிக்ககொண்டால் உலகம் தாங்குமா?
எல்லைப் பிரச்சினை சிக்கலுக்காளானது எப்படி? முடிச்சுகளை அவிழ்பதற்கு இன்று என்ன வழி? தேச பக்தி என்றால் என்ன? தீர்வு காண்பது சாத்தியமா? தீர்வுதான் என்ன?
இத்தகு சரமாரியான கேள்விகளுக்கு இந்நூல் விடை காண்கின்றது.
நூலாசிரியர் முது பெரும் கம்யூனிஸ்ட் ஆவர். பல வெளிநாடுகளுக்கும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும், இந்திய சீன எல்லைப்பகுதி உட்பட சுற்றுப்பயணம் மேற்கொண்ட நீண்ட அனுபவம் கொண்டவர்.
பல வரலாற்றியல் நூல்கள் எழுதியுள்ளார்.
தனது 88 வயதிலும் இந்நூலை மிக கவனத்துடன் ஆதாரங்களுடன், தேசபக்த உணர்வுடன் வரைந்துள்ளார்.
"