உயிர்த்திருத்தல்
Uyithiruthal
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யூ.மா. வாசுகி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :1999
ISBN :9788123410555
Add to Cartதுயரமான நினைவுகளுக்கெதிராக வலிந்துகொண்ட காரியார்த்தச் சிந்தனைகளும், துயரிடமிருந்தே பாஷை கற்றுத் திரும்பின்' என்கிறார் யூமா. வாசுகி ' சாவித்திரி' என்கிற அற்புதமான கதையில். என்ன செய்து. எப்படி வாழ? செயல்பாடுகளினாலும் கடக்கவொண்ண இழப்பின் துக்கம். படைப்பிலும் மனதின் 'நிகழ்வுகள்' தான்! எட்டுத்திக்கும் மரண வாசல், உயிர் கருகும் தீயவாடை. இதனூடே பயணம். பயணத்தில் விபத்து. இழப்பு, பிரிவு, அவ்வளவுதான். பிறகொன்றுமில்லை. ஒன்றுமேயில்லை. 'அமானுட நித்யத்திடம் சுயத்தை ஒப்புவித்துவிட்டு களிநடனத்தில் இணைவது' தவிர வேறொன்றுமில்லை! பின் - கலைஞனின் ' கதைகள்' வடிகால்கள்? இவரது பல கதைகளில் 'துக்கம்' - ஆதி துக்கம் - அடிப்படை துக்கம் இப்படித்தான் 'கனவு' வடிகால் மூலம் அல்லது அமானுடைமான குரல் - காட்சிப் படிம வடிகால் மூலமாக வெளியேறுகிற வழியைப் பெற்றுவிடுகிறது. சுயமனத்திற்கு வெளியே எந்தப் புகாரும் இல்லாது. சுய ஆன்மத் தேடலாகவே தொடங்கியுள்ள யூமா. வாசுகியின் குரல் ஒற்றைப் பறவையினுடையது. கதைகளில் ரத்தத்தின் வெதுமையை உணர முடிகிறது. குரல் ஒற்றைப் பறவையினுடையது. கதைகளில் ரத்தத்தின் வெதுமையை உணர முடிகிறது. இதனாலேயே, ஆரஞ்சுத் தோட்டம் பற்றி. 'ஆரஞ்சு மிட்டாய்' களைச் சொற்களாக்கிப் பேசாமல், ஆரஞ்சுச் சுளைகளையே சொற்களாக்கிக் சொல்லும் இயற்கையான மொழிநடை கைகூடியுள்ளது.