பேராசைக்காரன்
Peraasaikaran
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. ராமசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :24
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788123415222
Add to Cartசின்னஞ்சிறர்களுக்கான அற்புதமான கதைத் தொடர்.
கதைத் தொடர் ஒவ்வொன்றிலும் மூன்று கதைகள் இருக்கின்றன.
1. பேராசைக்காரன்
2. சிறிய எலியின் பெரிய உதவி
3. பேராசைக்கொண்ட நாய்
இக்கதைகள் பழங்கதைகளே ஆயினும், அவை நம் நாட்டுப் பள்ளிப் பிள்ளைகளின் மொழித்திறனுக்கு ஏற்ற வகையில் மிக எளிய சொற்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கதையும் நான்கு பெரிய வண்ணப் படங்களைக் கொண்டது. ஒவ்வொரு படத்திற்கும் ஏற்ப வாசகங்கள் ஒரு பக்கத்திற்குள் இருக்கும். நான்கு பக்கங்கள் வாசகம் என்ற முறையில் எட்டுப் பக்கங்களில் ஒரு கதை முடிவுறும்.
ஒவ்வொரு கதையின் இறுதியிலும் இரு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவை சிந்தனையைத் தூண்டக்கூடியவை. அந்தக் கேள்விகளைக் கேட்டு, நண்பர்களுடனும், பெற்றோர்களுடனும், ஆசிரியர்களுடனும் கலந்து பேசலாம்.
முறையாக இக்கதைகளைப் படித்து, நடித்து, பேசிப் பழகிய மாணவர்களுக்கு தமிழ் மொழியில் பேசுவதற்குத் தடுமாற்றம் ஏற்படாது என்று திண்ணமாக நம்பலாம்.
நன்றி அன்புடன்
வெ. ராமசாமி
ஜி ஜி எஸ் பதிப்பகம்
சிங்கப்பூர்.