book

எதிர்க்குரல் பாகம் 1

Ingea Oru Hitlar

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மனுஷ்யபுத்திரன்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :216
பதிப்பு :2
Published on :2012
ISBN :9789381828434
Add to Cart

அண்ணன் மனுஷ்யபுத்திரன் ‘எதிர்க்குரல்' என்ற தலைப்பில் தொடரை எழுதத் தொடங்கினார். எல்லாமே புதிய பார்வை. புதிய சிந்தனை. அதில் அச்சமற்ற போக்கே தெரிந்தது. மனுஷ்ய புத்திரனின் பார்வை கூர்மையாக இருக்கிறது. அவரது எழுத்துக்கள் சமூக அவலங்களையும் அரசியல் அவலங்களையும் தோலுரிக்கிறது. எதையும் மறைந்து நின்று மழுப்பிச் சொல்லாமல் நேருக்கு நேராய், பட்டவர்த்தனமாய்ப் பேசும் இவரது எழுத்துக்கள் வரவேற்கத்தக்கவை.
எதிர்க்குரல் என்ற தலைப்பில் நக்கீரனில் அவர் எழுதிவரும் கட்டுரைத் தொடரில் இருந்து 32 கட்டுரைகளை இங்கே தொகுத்துத் தருவதில் பெருமையடைகிறது நக்கீரன். மனுஷ்யபுத்திரனின் எழுத்துக்கள் காற்றில் கரைந்து போகும் கற்பூரம் போன்றவை அல்ல. கல்வெட்டுக்களாய் நின்று காலவெளியை அளக்கவல்லவை. நக்கீரனில் அவரது முதல் கட்டுரையே மனிதாபிமானத்தின் குரலாக அமைந்தது. நக்ஸலைட் வேட்டை என்ற பெயரில் சட்டீஸ்கர் மாநில சர்கேகுடா கிராமத்தில் காக்கிகளால் நரவேட்டை நடத்தப்பட்டதை காயங்களோடும் வலிகளோடும் கண்டிக்கிறது அந்தக் கட்டுரை...