book

சுகமான சூத்திரங்கள்

Sugamana Suthirangal

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் நாராயணரெட்டி
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :அந்தரங்கம்
பக்கங்கள் :176
பதிப்பு :4
Published on :2011
Add to Cart

ஒரு சிறிய இடைவெüக்குப் பிறகு… சுகமான சூத்திரங்களோடு உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன். இந்தச் சூத்திரங்களுக்குச் சொந்தக்காரன் நானல்ல; மன்மத முனிவன் வாத்சாயணன்.
ஏறத்தாழ இரண்டாயிரம் வருடங் களுக்கு முன்… வாத்சாயணன் படைத்த வசீகரக் காதல் வேதம் தான் காமசூத்ரா.
காமசூத்ரா என்ற பெயரைக் கேட்டதுமே பலர் பதட்டப் பரபரப்பு அடைவார்கள். முகத்தில் வெட்க ரேகை படர நகம் கடிப்பார்கள். ஐயோ அபச்சாரம் அபச்சாரம் இதை முத-ல் பரணில் தூக்கிப் போடு என இன்னும் சிலர் சங்கட சஞ்சலத்தோடு கூப்பாடு போடுவார்கள்.
இதற்கெல்லாம் எது காரணம்? அறியாமை.
காமசூத்ராவை ஏதோ படிக்கக் கூடாத ஆபாசக் களஞ்சியம் என்றுதான் நம்மில் பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இது நாடு கடத்தப்பட வேண்டிய நம்பிக்கை. முழுமையான மூட நம்பிக்கை.
நமது அகவாழ்வை நெறிப்படுத்த, மிகுந்த பொறுப்புணர்வோடு ஓதப்பட்ட பிரம்ம வேதம்தான் காமசூத்ரா. இதை சுகமான சூத்திரங் களாக்கி எழுத்து வடிவில் இந்த பூமிக்குத் தந்தவன் வாத்சாயணன்.
ஸ்திதி எனப்படும் வாழ்க்கைக்கு சுபஸ்திதி, அசுபஸ்திதி என இரண்டு முகங்கள் இருப்பதாக நமது வேதங்கள் சொல்கின்றன. சுபஸ்திதி என்பது இன்பமான வாழ்க்கை. அசுபஸ்திதி என்பது துன்பமான வாழ்க்கை. சுபஸ்திதியாய் அமைய வேண்டிய வாழ்க்கை, பலருக்கு ஏன் அசுபஸ்திதியாய் மாறி விடுகிறது? என்று கேட்டால்… இதற்கும் நமது வேதங்கள் பதில் சொல்கின்றன.
தர்மம் எனப்படும் அறநெறியும் அர்த்தம் எனப்படும் பொருள் நெறியும் காமம் எனப்படும் இன்பநெறியும் தான் மனிதர்கüன் முப்பரிமாணம். இவை சுய ஒழுக்கம் கலந்ததாக இல்லாவிட்டால்… ஸ்திதி சுபஸ்திதியாகிவிடும் என்கின்றன வேதங்கüன் ஞானக்குரல்.
அறம், பொருள் இன்பத்தை ஏன் சுய ஒழுக்கத்துடன் கடைபிடிக்க வேண்டும்?
அறம் என்கிற தர்மத்தில் ஒழுக்கமில்லை எனில் அது அதர்மமாகி… நம் வாழ்வில் துன்ப வெய்யிலை வீச வைத்து விடும்.