book

ஒரு மனுஷி

Oru Manishe

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரபஞ்சன்
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :224
பதிப்பு :3
Published on :2012
ISBN :9788183452083
Add to Cart

காலத்துக்கும் கலைஞனுக்கும் நடக்கிற கருத்துப் போரே இலக்கியம் எனலாம். இடையறாது ஓடும் நதிபோன்று காலம் பிசிரற்று இயங்கிக் கொண்டிருக்கிறது. கலைஞன் கூட ஒரு பிரபஞ்சத்தை இயக்கி மனிதர்களைப்  படைத்து நிஜ உலகமே எனும்படி ஒரு தோற்றத்தை எழுத்தின் மூலம் ஸ்தாபிதம் செய்கிறான். காலத்தால் இயங்குகிற உலகம் தன்னளவில் அறிவார்த்தமற்றது. கருத்தற்றது, சூரியனோ, சந்திரனோ, மழையோ, பனியோ எதுவும் அறிவு பூர்வமாக இயங்குவதில்லை. கலைஞன் படைத்த  உலகம் அறிவு பூர்வமானது. உணர்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டது. சில அரிய கணங்களைப் புகைப்படம் பதிவு செய்து வைப்பது மாதிரி, இலக்கியமும் கலைஞனும் மனித வாழ்வின் சில அற்புத கணங்களை நிலைபேறு உடையவனாய்ச் செய்துவிடுகின்றன.