book

பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-3)

Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-3)

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :312
பதிப்பு :3
Published on :2014
ISBN :9788183452496
Add to Cart

சக்தியை அடைந்த பின் மனிதன் எந்தப் பொருளிலும் ஆசை வைப்பதில்லை; எதையும் வெறுப்பதுமில்லை, விஷய போகத்திலும் மோகவயத்திலும் ஈடுபடுவதில்லை உற்சாகம் காட்டுவதில்லை. 'யஜ்ஞாத்வா மத்தோ பவத்தி', ஸ்த்ப்தோ பவத்தி. ஆத்மாராமோ பவத்தி: அந்த பக்தியை அறிந்து கொண்டபின், மனிதன் பைத்தியமாகிவிடுகிறான். ஸ்தம்பித்து விடுகிறான். ஆத்மாரமன் ஆகிவிடுகிறான். உன்மத்தனாகி விடுகிறான். பைத்தியமாகிவிடுகிறான். பக்தியானது ஓர் அபூர்வமான உன்மத்தம். கண்கள் எப்போதும் ஒரு வித மயக்கத்தில் மூழ்கி இருக்கும். மனம் எப்போதும் ஒருவித ஆபூர்வமான மதிமயக்கத்திலே மயங்கிக் கிடக்கும். வாழ்க்கை சாதாரண நிலையைத் தாண்டி, ஒரு நடனம் ஆகிவிடுகிறது. ஒரு வித நாட்டியம் ஆகிவிடுகிறது. ரசனை இழைக்கப்பட்டு ஒரு புதியபாதை துவங்கிவிடுகிறது. புதியதோர் வெளியில் பிரவேசம் ஆரம்பமாகிவிடுகிறது.