பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-8)
Pathanjali Yogam-Oru Vingnana Vilakkam (Part-8)
₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :368
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183450577
Add to Cartஉங்களிடம்
பணம் இருக்கலாம். அது எந்தவொரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தி விடாது. அது
இல்லாமலும் நீங்கள் இருக்கலாம். அதுவும் எந்தவொரு வித்தியாசத்தையும்
உண்டுபண்ணி விடாது. சமூகத்திடம் இருந்து பல அங்கீகாரங்களையும்,
பட்டங்களையும், விருதுகளையும் நீங்கள் பெற்றிருக்கலாம். பாராட்டுகளையும்,
சான்றிதழ்களையும் அது உங்களுக்கு வழங்கியிருக்கலாம். இது எந்த ஒன்றையும்
குறிப்பதாகாது - இது ஒரு விளையாட்டு. இந்த ஆட்டத்தை நீங்கள் கூர்ந்து
கவனித்தால் புரிய வரும். இந்த ஆட்டத்தில் உங்களை ஒருபோதும் நீங்கள்
கண்டுகொள்ள முடியாது என்பதை... சமுதாயம் நீங்கள் யார் என்பதற்கு மாயை
சார்ந்த கருத்துகளை வழங்கி உங்களைத் தொடர்ந்து முட்டாளாக்கிக்
கொண்டிருக்கும். நீங்களும் அவற்றில் நம்பிக்கை வைத்திருப்பீர்கள். அவற்றை
நம்பிக் கொண்டிருப்பீர்கள். உங்களுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும்
வீணாகிவிடும். ஆக, தியானம் முதல்முறையாய் உங்களுக்குள் உண்மையிலேயே வேலை
செய்யத் தொடங்கி உங்களை அழித்தொழிக்கத் தொடங்குகிறபோது உங்களுடைய மதம்,
நாட்டுரிமை, பெயர், சாதி மறைகிறது. மெள்ள மெள்ள நீங்கள் நிர்வாணப்பட்டு,
உங்களுடைய தூய இருப்புணர்வோடு மட்டுமே இருப்பீர்கள். தொடக்கத்தில் அது
அச்சமூட்டுவதாய் இருக்கும். காரணம், நீங்கள் காலூன்ற ஓர் இடத்தைக்
கண்டுகொண்டிருக்க மாட்டீர்கள். தொடர்ந்து அகந்தையோடு இருப்பதற்கு எந்தவொரு
வழிவகையையும் உங்களால் காண முடிந்திருக்காது. எவ்வித உதவியும் இல்லாமல்,
எல்லா ஆதாரங்களும் பின்னடைய, உங்களுடைய கட்டமைப்பு சரியத் தொடங்குகிறது.