book

மணலும் நுரையும்

Manalum Nuraiyum

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலீல் ஜிப்ரான், டாக்டர் ரமணி
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :2
Out of Stock
Add to Alert List

கலீல் ஜிப்ரான் பெயரைக் கேட்டாலே படிப்பார்வலர்களுக்கு இனம் புரியாத ஈர்ப்பும் அவரைப் பற்றிய உயர்வான எண்ணமும் ஒருசேர உருவாகும். திருவள்ளுவரைப்போல் சுருக்கமான வரிகளில் உயர்வான விஷயங்களை மனதுக்குள் பாய்ச்சிவிடும் கூர்த்தமதியாளர் ஜிப்ரான். தத்துவம், கவிதை, கதை, வரலாறு என்று பல விஷயங்களைத் தொட்டு எழுத்துலகின் சிகரம் தொட்டவர் திருவள்ளுவர் எழுதியதையாவது அறம், பொருள், இன்பம் என்ற மூன்று விஷயங்களுக்குள் அடக்கிவிட முடியும். ஆனால் கலீல் ஜிப்ரான் எழுத்துக்களோ எந்த எல்லைகளுக்குள்ளும் அடக்க முடியாத ஏகாந்தத் தன்மை கொண்டது. நமது சித்த புருஷர்கள் இன்றைய விஞ்ஞான உலகமே வியக்கும் பல விஷயங்களைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிச் சென்றிருக்கிறார்கள். ஆனால் அவற்றை அவ்வளவு எளிதில் எல்லோராலும் உடனே புரிந்துகொள்ள முடியாது. அதுபோல்தான் ஜிப்ரானின் எழுத்துக்களும் ஆழ்ந்து புரிந்து படித்து லயிக்க வேண்டியவை!