மார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை
Karuppu Vellai: Martin Luther King
₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலு சத்யா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183683562
குறிச்சொற்கள் :சரித்திரம், பிரச்சினை, போர்
Add to Cartநான்கு கொலை முயற்சிகள். கத்திக்குத்து. காரணமே இல்லாமல் சிறை தண்டனை. தாக்குதல்கள். வீட்டில் குண்டுவீச்சு. இத்தனை நடந்தும், மார்ட்டின் லூதர் கிங்கால் தன் எதிரிகளை நேசிக்க முடிந்தது. சோர்ந்து போகாமல கம்பீரமாக எழுந்து நின்று போராட முடிந்தது. காந்திக்குப் பிறகு அஹிம்சைக் கொடி ஏந்திப் போராடி வென்ற ஒரு கறுப்பின அமெரிக்கரின் துடிப்பான வாழ்க்கைக் கதை இது!
இனவெறி உச்சத்தில் இருந்த சமயம் அது.
வெள்ளையர்களுக்குத் தனி பள்ளிக்கூடம் கறுப்பர்களுக்குத் தனி. வெள்ளையர்கள் உபயோகிக்கும் சாலைகளில் கறுப்பர்களுக்கு அனுமதியில்லை. குழந்தைகள் விளையாடும் இடங்கள் கூட தனித்தனி. உடல் ரீதியாக மட்டுமல்ல, உணர்வு ரீதியாகவும் கறுப்பர்கள் மிருகத்தனமாக ஒடுக்கப்பட்டார்கள்.
மார்ட்டின் லூதர் கிங் ஒரு கனவு கண்டார். ஒவ்வொரு பள்ளமும் மேடாக்கப்படுவது போல். வெள்ளையர்களுக்குச் சமமாக கறுப்பர்கள் நடத்தப்படுவது போல். நிறத்தை வைத்து மதிப்பிடாமல் நடத்தைகள் மூலம் மனிதர்கள் மதிக்கப்படுவது போல். கறுப்பின மக்கள் சுதந்தரக் காற்றை சுவாசிப்பது போல்.
கனவு கண்டதோடு நிறுத்திக்கொள்ளவில்லை கிங். போராட ஆரம்பித்தார். வன்முறையை அல்ல; அறவழிப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். வெறுப்பை அல்ல, உன்னதமான நேசத்தைச் சுமந்து தன் எதிரிகளைச் சந்தித்தார்.
இரண்டு பரிசுகள் அவருக்குக் கிடைத்தன.நோபல், படுகொலை.