ஆல்ஃபா தியானம்
Alpha Dhyanam
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாகூர் ரூமி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183684194
Add to Cartஆல்ஃபா என்பது ஓர் அறிதல் முறை. ஆச்சர்யமூட்டத்தக்க வகையில் உங்கள் இயல்புகளை மேன்மைப்படுத்தி, வாழ்வையே வண்ணமயமாக்கிவிடக்கூடிய ஒரு சிம்பிள் தியானம். முயற்சி செய்து பாருங்கள்! வியந்துபோவீர்கள்.
துருப்பிடித்து இளைத்த இரும்பை என்ன செய்யலாம்? தூக்கி எரியலாம். அல்லது, நெருப்பில் இட்டு முறுக்கேற்றலாம். முதல் காரியம் சுலபம். இரண்டாவது கடினமானது. பழுக்கக் காய்க்க வேண்டும். செக்கச்செவேலென்று சிவக்கும் வரை தீயில் வாட்டவேண்டும். நெருப்பின் சிவப்பு பற்றிக்கொள்ளும்வரை காத் திருக்கவேண்டும்.
மனம் துருப்பிடித்தாலும் இதையேதான் செய்யவேண்டும். ஆல் ஃபா தியானத்தின் சூட்சுமம் இதுதான். நெருப்பைப் பற்றிக் கொள்ளுங்கள். நீங்களும் நெருப்பாக மாறிவிடுவீர்கள். புதுப்பொலிவுடன் முறுக்கேறி ஜொலிக்க ஆரம்பிப்பீர்கள். நெருப்பு எது, சிவப்பு எது, பற்றிக்கொள்ளுதல் என்றால் என்ன என்பதை புரிந்துகொண்டால் போதும்.
எப்போதெல்லாம் மனம் சோர்வடைகின்றதோ, எப்போதெல்லம் மனம் அலைபாய்கிறதோ, எப்போதெல்லாம் துன்பமும் துயரமும் உங்களை வாட்டி வதைக்கிறதோ, அப்போதெல்லாம் ஆல்ஃபாவிடம் அடைக்கலம் ஆகுங்கள்.
கோடி பணம் திரட்டிவிடலாம். அமைதியான ஒரு வாழ்க்கை சாத்தியமா என்று ஏங்குகிறவர்களா நீங்கள்? ஆல்ஃபா, அமைதியை மட்டுமல்ல. உங்கள் வாழ்வில் ஒரு நிரந்தரமான ஆனந்தத்தையும் கொண்டு சேர்க்கும்!